திருப்பதி கோவிலில்.. 18 கோடி ரூபாய்க்கு 10 பேருந்துகள் காணிக்கை.. "எல்லாம் இதுக்காகத் தானா?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கி வருவது திருப்பதி கோவில். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கே தரிசனம் மேற்கொள்ள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தருவதால் எப்போதுமே திருப்பதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியே இருக்கும்.

திருப்பதி கோவிலில்.. 18 கோடி ரூபாய்க்கு 10 பேருந்துகள் காணிக்கை.. "எல்லாம் இதுக்காகத் தானா?"

                                Images are subject to © copyright to their respective owners.

Also Read | அன்பு தங்கைக்கு 8 கோடிக்கு சீர்... ஊரையே திரும்பி பாக்க வெச்ச விவசாயி அண்ணன்கள்

இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தானத்தை சுற்றி காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதமாக அதிகாரிகளுக்கு எலக்ட்ரிக் கார்களை வழங்கி உள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள இன்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று, மொத்தம் 18 கோடி ரூபாய் செலவில் 10 எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளை வழங்கி உள்ளது. ஒரு பேருந்து 1.8 கோடி ரூபாய் வீதம் என மொத்தம் 10 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள சூழலில், அவற்றிற்கு திருமலை கோவில் முன்பு வைத்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

10 New electric buses donation to tirupathi temple

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து பேருந்துகளின் சாவிகளும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, திருமலையில் காற்றில் மாசு படிவதை தவிர்க்க பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது. தொடர்ந்து லட்டு பிரசாதங்கள் வழங்கவும் பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் சணல் பைகளாக மாற்றப்பட்டது.

10 New electric buses donation to tirupathi temple

Images are subject to © copyright to their respective owners.

அது மட்டுமில்லாமல், திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பேருந்துகள் அனைத்தும் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய்ய பயன்படுத்தவும் தேவஸ்தானம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "Long Drive போலாமா’.. புது மனைவியுடன் மாட்டு வண்டில ரைடு போன மாப்பிள்ளை !!

TIRUPATHI, TIRUPATHI TEMPLE, NEW ELECTRIC BUSES

மற்ற செய்திகள்