கப்பலுக்குள்ள சிக்கிட்டேன் மா...! 'இன்னும் கொஞ்ச நேரம் தான், அதுக்குள்ள...' 'வாட்ஸ்அப்' காலில் 'பேரிடியாக' வந்த தகவல்...! - நிலைகுலைந்து போன மனைவி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள துறைமுகத்தில் கப்பல் ஒன்று, ஒரு மாத காலமாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்குள்ள சிக்கிட்டேன் மா...! 'இன்னும் கொஞ்ச நேரம் தான், அதுக்குள்ள...' 'வாட்ஸ்அப்' காலில் 'பேரிடியாக' வந்த தகவல்...! - நிலைகுலைந்து போன மனைவி...!

அந்த கப்பலில் உள்ள பத்து இந்திய மாலுமிகள் உட்பட 13 ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அவர்களை கப்பலில் இருந்து இறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் பல நாட்களாக கப்பலில் சிக்கி தவிக்கும் இந்த விஷயத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சார்மேஷ் சர்மா வெளியிட்டுள்ளார்.

10 Indian sailors aboard a port in northern Cyprus

இவர்களின் இந்த நிலையை கப்பலில் இருக்கும் ஊழியர் ஒருவர் தன் மனைவிடம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த மாலுமி சஞ்சீவ் சிங் ரத்தோட்டு, தன் மனைவியிடம் வாட்ஸ்அப் கால் மூலம் தங்களின் நிலை குறித்து கூறியுள்ளார்.

கப்பலில் போதிய உணவு இல்லை, ஒரு சில ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தங்களின் உயிர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், துறைமுக அதிகாரிகள் தங்கள் செல்போன் நெட்வொர்க் மற்றும் இணையதள இணைப்பை இன்னும் சற்று நேரத்தில் துண்டிக்கப்போவதாகவும், லிபியாவில் போர் நடைபெறும் பகுதிக்கு கப்பலை கொண்டு செல்வதற்கு கட்டாயப்படுத்துவதாகவும் ரத்தோட் தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்

இதனால் அதிர்ச்சியடைந்த ரத்தோட்டின் மனைவி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது எந்தவித பதிலையும் சொல்லாமல் அலைகழித்து வந்துள்ளனர். இதனையடுத்து தன் கணவரையும், மற்றவர்களின் நிலை குறித்தும் காங்கிரஸ் தலைவர் சர்மா அவர்களிடம் விஷயத்தை கொண்டு போயுள்ளார். 

விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்திய மாலுமிகளை மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்