'அந்த நாட்டுல' இருந்து வந்த '10 பேர்' எங்க போனாங்கன்னே தெரியல...! 'போன் வேற சுவிட்ச் ஆஃப்ல இருக்கு...' - கர்நாடக சுகாதாரத்துறை தகவல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 10 வெளிநாட்டவர்களை காணவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

'அந்த நாட்டுல' இருந்து வந்த '10 பேர்' எங்க போனாங்கன்னே தெரியல...! 'போன் வேற சுவிட்ச் ஆஃப்ல இருக்கு...' - கர்நாடக சுகாதாரத்துறை தகவல்...!

தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியது முதல் பல ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதித்துள்ளது. அதோடு முன்பே வந்த மக்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 10 வெளிநாட்டவர்களை காணவில்லை என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறும் போது, 'தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு பரவ தொடங்கியபின், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 57 பேர் பெங்களூரு வந்துள்ளனர்.

இதில் அனைவரது விவரங்களையும் உறுதி செய்த நிலையில் 10 பேரின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிடுள்ளார்.

அதோடு அந்த 57 பேரில் தற்போது 2 பேருக்கு 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

10 FOREIGNERS, BANGALORE, AFRICA, MISSING

மற்ற செய்திகள்