"1 கோடி ரூபாயா?.. கொரோனா காலத்துல குடும்ப கஷ்டத்தையே இல்லாம பண்ணிடுவேன்!".. 'நம்பி இருந்த' இளம் பெண்ணுக்கு 'ஒரு நொடியில்' நேர்ந்த 'பரிதாப கதி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு மூடலபாளையா அருகே தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த 25 வயதான பெண்ணுக்கும் அவரது குடும்பத்துக்குமிடையே பணப்பிரச்சனை உண்டானது.
இந்த பிரச்சனையைத் தீர்க்க தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்த அப்பெண், இணையதளத்தின் மூலம் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் சிறுநீரக தானம் செய்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று இருந்ததை அடுத்து, அதில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவரிடம் பேசிய மர்ம நபர்கள் சிறுநீரகத்தை வாங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் சிறுநீரகத்தை விற்பதற்கான போலீஸாரின் அனுமதி, அறுவை சிகிச்சை, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றுக்காக முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனால் தம் உறவினர்களிடம் 3 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கடனை வாங்கி, இந்த மர்ம நபர்களின் வங்கிக் கணக்குக்கு அப்பெண் அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அந்த நம்பருக்கு போன் செய்தால் போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அப்போதுதான் அப்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பின்னர் சைபர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
மற்ற செய்திகள்