Watch Video: யாருமே இல்லாம தானா உடற்பயிற்சி செய்யுது... ஒருவேளை பேயா இருக்குமோ... பார்க்கில் மிரள வைத்த காட்சி... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யும் கருவிகள் தானாக இயங்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video: யாருமே இல்லாம தானா உடற்பயிற்சி செய்யுது... ஒருவேளை பேயா இருக்குமோ... பார்க்கில் மிரள வைத்த காட்சி... வைரல் வீடியோ!

காலை மற்றும் மாலையில் பொழுதுபோக்குவதற்கு மக்கள் கூடும் இடமாக பூங்காக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. பொழுதை போக்குவதும் மட்டுமின்றி, உடலை மக்கள் கட்டுக்கோப்பாகவும், உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் சில பூங்காக்களில் உடற்பயிற்சி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வன விலங்குகள் மட்டுமின்றி, பல வைரலான வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவபர் வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா.

அவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அது, எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எனினும் யாருமே இல்லாமல் பூங்காவில் கருவிகள் மட்டும் தானாக பயிற்சி செய்து ஆடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ‘தற்போது இருக்கும் ஜங்க் புட் காலத்தில் பேய்களும் கூட உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றன’ என பதிவிட்டு, வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து  வருகின்றனர்.

VIRAL, VIDEO, SUSANTA, NANDA