VIDEO: ‘உட்றாத ஓடு.., ஓடு’!.. கர்ணன் படத்தில் கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் செல்வதுபோல் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

இளம்பெண்ணின் செல்போனை பறவை ஒன்று எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘உட்றாத ஓடு.., ஓடு’!.. கர்ணன் படத்தில் கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் செல்வதுபோல் நடந்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!

இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வீட்டு மாடியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். மாடியின் சுற்றுச்சுவரில் சிலர் செல்போன்களை வைத்திருந்துள்ளனர். அதன் அருகே அவர்கள் சாப்பிடக் கொண்டு வந்த உணவையும் வைத்திருந்துள்ளனர்.

VIDEO: Bird flies away with woman's mobile goes viral

அப்போது எங்கிருந்தோ வந்த பறவை ஒரு செல்போனை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றது. இதனால் பதறிப்போன அப்பெண் கத்திக்கொண்டே பறவையை துரத்தி ஓடியுள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்றதும் செல்போனை பறவை கீழே போட்டுள்ளது.

VIDEO: Bird flies away with woman's mobile goes viral

இவை அனைத்தையும் அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு தோழி செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். கர்ணன் படத்தில் கோழிக்குஞ்சை பருந்து தூக்கிச் செல்வது போல, பெண்ணின் செல்போனை சட்டென தூக்கிச் செல்லும் பறவையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்