'அச்சத்துடன்' திரும்பி பார்க்கும் மான்... ஒளிஞ்சு இருக்கது 'யாருன்னு' கண்டுபுடிங்க?... களத்தில் 'குதித்த' நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்சில புகைப்படங்களை முதலில் பார்க்கும்போது நமக்கு அதில் யாரும் இருப்பது போல தெரியாது. ஆனால் அதில் யாராவது இருப்பதாக தெரிய வந்தால் அட, ஆமால்ல என ஆச்சரியப்படுவோம். அண்மைக் காலங்களாக புகைப்படத்தில் ஒளிந்து இருக்கும் மிருகங்களை கண்டறிவதை நெட்டிசன்கள் பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.
அதிலும் தற்போதைய லாக்டவுன் காலத்தில் பலரும் விளையாட்டு, புதிர் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ரமேஷ் பிஸ்நோய் என்னும் வனத்துறை அதிகாரி மான் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு இதில் மறைந்து இருக்கும் விலங்கு எது? என கேட்டிருந்தார். முதல்முறை பார்க்கும்போது எந்த விலங்கும் இல்லாதது போல தோன்றினாலும் அதில் மறைந்து இருக்கும் புலியின் கண்களை பலரும் கண்டறிந்து பதில் அளித்துள்ளனர்.
Eye contact with predator and prey. Can you spot the predator? @aakashbadhawan @NalinYadavIFS pic.twitter.com/XLUN2YyNvw
— Ramesh Bishnoi (@joy_bishnoi) May 27, 2020
மேலே உள்ள புகைப்படத்தில் புலி எந்த இடத்தில் மறைந்து இருக்கிறது என்பதை கண்டுபுடித்து விட்டீர்களா? இல்லையெனில் உங்களுக்கான பதில் கீழே இருக்கிறது.
— Mayuri (@Friend4u_Mayuri) May 27, 2020
மற்ற செய்திகள்