‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

தொழில்நுட்ப தடுப்புச் சுவர்களின் தடிமன் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில், ஹேக்கிங் மூலம் கைவரிசையைக் காட்டும் ஹேக்கர்களுக்கும் பஞ்சம் இல்லாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த ரிஸ்க்கெல்லாம் எதுக்குங்க என சொல்லி, பில்லை வைத்து கூகுள், பேஸ்புக்கிடம் 800 கோடி ரூபாய் சுருட்டியிருக்கும் நபர் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.

‘அனுப்புனது பில்லுதான்.. ஆட்டய போட்டது ரூ.800 கோடி’.. எங்க போய் கைவெச்சிருக்காரு பாருய்யா!

லித்துவேனியாவைச் சேர்ந்த எவால்டாஸ் ரிமாசாஸ்கஸ் என்பவர்தான் அந்த நபர்.  தைவானில் உள்ள குவாண்டா கம்ப்யூட்டர் என்கிற நிறுவனம் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்குத் தேவையான ஹார்டுவேர்களை சப்ளை செய்து வந்த நிலையில், இதை பயன்படுத்தி, அந்த நிறுவனத்தைப் போலவே போலி பில்களை அச்சு அசலாக தயார் செய்து பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  கூகுள், பேஸ்புக் நிறுவனங்களும் இதுதான் ஒரிஜினல் பில் என நினைத்துக்கொண்டு எவால்டாஸின் குவாண்டம் கம்ப்யூட்டர் என்கிற நிறுவனத்தின் அக்கவுண்ண்ட்டுக்கு பணம் அனுப்பிவைத்திருக்கின்றன. ஆம், அதற்கென இவர் தைவான் கம்பெனியான குவாண்டம் கம்ப்யூட்டரின் பெயரில் தன் நாட்டிலும் ஒரு நிறுவனத்தை ரிஜிஸ்டர் செய்துள்ளார்.

இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து கூட்டாக இதைச் செய்து வந்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு வரும் பணத்தை சைப்ரஸ், லித்துவேனியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா மற்றும் லாட்வியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.  இதனால் 2013 முதல் 2015வரையிலான இடைப்பட்ட காலத்தில் இவர்கள் அடிச்சது 121 மில்லியன் டாலர், அதாவது சுமார் 800 கோடி ரூபாய்.

ஒரு வழியாக 2016-ஆம் ஆண்டின்வாக்கில் இதனை கண்டுபிடித்துவிட்ட கூகுள், எவால்டாஸ் மீது தொடர்ந்த வழக்கை அடுத்து, 2017-ஆம் ஆண்டு எவால்டாஸ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் எவால்டாஸ் தன் மீதான பண மோசடி, அடையாளத் திருட்டு உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதன் பேரில் வரும் ஜூலையில் இவருக்கு அளிக்கப்படும் தீர்ப்பு கிட்டத்தட்ட 30 வருட சிறைத் தண்டனையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் அதிகம் ஏமார்ந்த பேஸ்புக் உடனடியாக தான் இழந்த பணத்தை மீட்டதாக தெரிவித்தது. ஆனால் இந்த கொம்பாதி வில்லனைக் கண்டுபிடித்த கூகுள் தான் இழந்ததை மீட்டதா என அறிவிக்கவில்லை.

ஜாம்பவான்கள் நிறைந்த கூகுள், பேஸ்புக் கண்ணில் ஒரே ஒரு பில்லை வைத்து விரல் விட்டு ஆட்டியுள்ள எவால்டாஸ் வைரலாகி வருகிறார்.

FACEBOOK, GOOGLE, BIZARRE, BILL, THEFT