'டைம் ட்ராவலரா இருப்பாங்களோ?'.. 120 வருஷத்துக்கு முன்னாடியே இருந்த கிரேட்டா தன்பெர்க்? தெறிக்கவிடும் ஃபோட்டோஸ்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்120 ஆண்டுகளுக்கு முன்பாக கிரேட்டா தன்பெர்க் போலவே ஒரு பெண்குழந்தை இருந்திருப்பது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்ததை அடுத்து அப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
120 ஆண்டுகளுக்கு முன்பான கிரீக்கின், யூகோன் பிராந்தியத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் 3 குழந்தைகளை உளடக்கிய புகைப்படம் ஒன்றுதான் இணையத்தில் வலம் வருகிறது. தங்கச் சுரங்கக் கழிவுகளிடையே போஸ் கொடுத்திருக்கும் இந்த 3 குழந்தைகளின் இப்படம் கருப்பு வெள்ளை நிறத்தில் உள்ளது.
In other news, Greta Thunberg is a time traveller.
(Three children operating rocker at a gold mine on Dominion Creek, Yukon Territory, ca. 1898).https://t.co/dshFRD8hI2 pic.twitter.com/19tkXkLH9e
— Paul Joseph Watson (@PrisonPlanet) November 19, 2019
இதில் கொஞ்சம் வயதில் மூத்தவராய் இருக்கும் அந்தச் சிறுமி, அப்படியே அச்சு அசலாய், காலநிலை மாற்றத்துக்கு எதிராக அண்மையில் ஐ.நாவில் பேசிய சூழலியல் போராளியும் சிறுமியுமான கிரேட்டா தன்பெர்க்கின் முகசாயலை ஒத்திருக்கிறார். இன்னும் உண்மைத் தன்மை அறியப்படாத நிலையில், இப்படம் வைரலாகி வருகிறது.
She is a time traveller 😆@GretaThunberg
1898 - 2019 pic.twitter.com/FP7N3BgM2y
— bobfinn (@bob_mertens_) November 19, 2019
இணையவாசிகளோ, இந்த குழந்தை டைம் டிராவல் செய்துவந்து மீண்டும் பூமியின் எதிர்காலத்திற்காக போரடுகிறாரோ? என்றெல்லாம் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.