ராஷ்மிகா-கே டஃப் கொடுப்பாரு போலயே.. போதையில் 'ஓ சாமி' பாடலுக்கு டான்ஸ்..வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்புஷ்பா படத்தின் 'ஓ சாமி' பாடலுக்கு குடிமகன் ஒருவர் தன்னை மறந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புஷ்பா
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது புஷ்பா படம். அல்லு அர்ஜுன், சமந்தா, பகத் பாஸில் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் வரும் 'ஓ சாமி' பாடல் ரிலீசான கொஞ்ச நாட்களிலேயே வைரல் ஆனது. தமிழில் இந்த பாடலை ராஜலட்சுமி செந்தில் கணேஷ் பாடினார். ரீல்ஸ் துவங்கி அனைத்து சமூக வலை தளங்களிலும் 'ஓ சாமி' ஒலித்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு போதை ஆசாமி ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.
நடன சங்கமம்
மேளம், நாதஸ்வரம் என மங்கள வாத்தியங்கள் வழியாக வெளிவரும் 'ஓ சாமி' பாடலின் இசைக்கு தன்னுடைய இடை அசைவால் வணக்கம் செலுத்தி இருக்கிறார் இந்த போதை நபர். 'பீஸ்ட்' படத்தின் அரபிக்குத்து பாடல் நடனத்தையும், 'புஷ்பா' படத்தின் ஓ சாமி பாடலின் ராஷ்மிகா நடனத்தையும் ஒன்றிணைத்து இவர் ஒரு நடன சங்கமத்தையே நிகழ்த்தி இருக்கிறார்.
இடுப்பு நடனம்
இந்த வினோத நடனம் நடந்தது எங்கே என சரிவர தெரியவில்லை. மங்கள வாத்தியங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்கும் போது, ஏதோ கோவில் விசேஷம் போலவே தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்தே இடுப்பு நடத்தின் சிறப்புகளை பட்டியலிடும் வகையில் ஆடிவந்த இந்த நபர் இறுதியில் பரவசம் அடையும் அளவுக்கு தன்னுடைய நடன திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
பிரபல பாடலான 'ஓ சாமி'-க்கு ராஷ்மிகா மந்தனாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் குடிமகன் ஒருவர் நடனம் ஆடும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்