'புயல்' வேகத்தில் வந்த கார்.. போலீஸிடம் இருந்து காப்பாற்றிய 'புறா'.. வைரல் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

வளர்ந்த பெரும் நாடுகளில் மட்டுமல்லாது, நம்மூரிலும் முக்கிய இடங்களில் வாகன ஓட்டிகளுக்கான வேகக் கட்டுப்பாடுகளுக்கான கி.மீ அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

'புயல்' வேகத்தில் வந்த கார்.. போலீஸிடம் இருந்து காப்பாற்றிய 'புறா'.. வைரல் சம்பவம்!

ஆனால் பெருநாடுகளில் அவ்வாறு விதிகளை மீறிச் செல்பவர்களை பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீட் டிராப் கேமராக்கள் கொண்டு  கண்காணிக்கப்படும். அவ்வாறு ஜெர்மனியில் விதிகளை மீறிய வேகத்தில் சென்றவருக்கு நேர்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று வைரலாகி வருகிறது.

ஆம், 30 கி.மீ வேகத்துக்குள் செல்லவேண்டிய குறுகலான மலைப்பாதையில் தன் காரினை 54 கி.மீ வேகத்தில் செலுத்திய கார் டிரைவருக்கு நம்மூர் மதிப்பில் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஜஸ்ட் மிஸ். நூலிழையில் அந்த நபருக்கு விதிக்கப்பட வேண்டிய அந்த அபராதத்துக்கு வேலையில்லாமல் தக்க சமயத்தில் வந்த புறா ஒன்று காப்பாற்றி வைரலாகியுள்ளது.

ஆம், அந்த வேகத்தில் சென்ற அந்த டிரைவரின் கார் மீது மலைமேலிருந்து விழுந்த புறா ஒன்று, அவரது முகத்தை மறைத்துக் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து பேசிய வியர்சென் மாவட்ட காவல்துறை, கிறித்துவத்தில் புனிதமாகப் பார்க்கப்படுவது புறா; அதன் பேரில் இவரை விட்டுவைக்கிறோம். புறா தன்னை காப்பாற்றியுள்ள இந்த புகைப்படத்தை பார்த்தாவது இனி அவர் விதிகளை மதிக்கப்பட்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

CAR, SPEED, DOVE, DRIVING