VIDEO: ஏம்பா 90's கிட்ஸ்.. Air hostess தமிழ்ல என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க.. அவ்ளோதான் இனி நம்ம பசங்கள கையில புடிக்க முடியாதே..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்Air hostess ஒருவரின் டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்றில் தமிழ் தெரிந்த இளைஞர் ஒருவர் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, ‘தமிழில் ஒருவர் பேச ஆசைப்படுகிறார்’ என கூறிவிட்டு, ‘என்னங்க உங்களுக்கு வேணும்?’ என கேட்டார்.
உடனே அப்பெண், ‘எனக்கு மாப்பிள்ளை வேணும்.. மாப்பிள்ளை வேணும்’ என உற்சாகமாக கூறினார். உடனே அந்த இளைஞரும், ‘அப்படி யாராவது இருக்கீங்களா?’ என குறும்பாக கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் குறும்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் பலரும், 90’s கிட்ஸ் தான் ரொம்ப வருசமாக திருமணம் ஆகாமல் இருப்பதாகவும், அதனால் இந்த வீடியோ அவர்களுக்கு முதலில் சேர் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்