'தாயா, பிள்ளையா பழகிட்டு இருக்கோம்'... 'என் மேல இப்படி ஒரு அபாண்டமான பழிய போடுறீங்க'... உடைந்து நொறுங்கிய மார்க் ஜூக்கர்பர்க்!
முகப்பு > செய்திகள் > வணிகம்பேஸ்புக் நிறுவனம் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடியோடு மறுப்பதாக மார்க் ஜூக்கர்பர்க் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென செயல்படாமல் முடங்கின. இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால் அவற்றைச் சார்ந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 7 மணி நேரத்திற்குப் பிறகு இந்த பாதிப்பு சரியானது.
ஆனால் எந்த 7 மணி முடக்கத்திற்கு என்ன காரணம் என்பதை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதற்காகப் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த முடக்கத்தின் காரணமாக பேஸ்புக் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான மார்க் ஜூக்கர்பர்க் 7 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இதற்கிடையே லாபத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் புயலைக் கிளப்பியது. இந்த குற்றச்சாட்டு மார்க்கை பெரிதும் பாதித்தது. இதுகுறித்து பேசிய அவர், ''எங்களின் சுயலாபத்துக்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.
எந்த ஒரு நிறுவனமும், தனது வாடிக்கையாளர்களைக் கோபப்படுத்தும் விதமாகவும், அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் வகையிலும் அவர்களின் சேவை இருக்காது'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது நிறுவன ஊழியர்களுக்கு நீண்ட ஒரு கடிதத்தை எழுதியுள்ள மார்க், அந்த கடிதத்தை அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அதில், ''அண்மையில் நடந்த பேஸ்புக் அவுட்டேஜ் பிரச்சனையை இதற்கு முன்னால் நாம் சந்தித்தது இல்லை. இது நம் தொழில்நுட்பப் பிரச்சினையையும் தாண்டி, நமது சேவை மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் புரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு. நமக்கு லாபம் சரிந்திருக்கலாம், நமது வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களுக்கு மாறியிருக்கலாம்.
ஆனால், நமது பேஸ்புக்கை நம்பி எத்தனை மக்கள் தங்களின் நெருக்கமானவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது, எத்தனை பேரின் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது, எத்தனை பேர் தங்கள் சமூகத்திற்குக் கொடுக்க வேண்டிய ஆதரவைக் கொடுக்க முடியாமல் போனதால் ஏற்பட்டது என்பதே முக்கியம்.
மேலும் நமது சேவை உலகிலேயே சிறந்த சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்'' என நீண்ட கடிதத்தை எழுதியுள்ள மார்க் மேலும் பல விஷயங்கள் குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்