Thalaivi Other pages success

செப்டம்பர் 17-க்கு பிறகு இதெல்லாம் ‘ஆர்டர்’ பண்ண முடியாது.. ‘இந்த சேவையை நிறுத்த போறோம்’.. Zomato முக்கிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 17-க்கு பிறகு இதெல்லாம் ‘ஆர்டர்’ பண்ண முடியாது.. ‘இந்த சேவையை நிறுத்த போறோம்’.. Zomato முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக ஜொமாட்டோ திகழ்ந்து வருகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு மளிகை பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் சேவையை ஜொமாட்டோ தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு 15 நிமிடங்களுக்கு உள்ளாகவே பொருட்களை டெலிவரி செய்து வந்ததாக அந்நிறுனம் தெரிவித்துள்ளது.

Zomato to shut down its grocery delivery service from SEP-17

ஆனாலும் வாடிக்கையாளரின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதில் இடைவெளி இருப்பதாக கருதுவதாகவும், அதனால் வரும் செப்டம்பர் 17-ம் தேதியுடன் இந்த சேவையை நிறுத்த உள்ளதாகவும் ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Zomato to shut down its grocery delivery service from SEP-17

இதுகுறித்து மளிகைக்கடைகளுக்கு இமெயில் மூலமாக ஜொமாட்டோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் டெலிவரி நேரம் 45 நிமிடம் என்ற அடிப்படையில் இந்த சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்