Thalaivi Other pages success

'Zomato துணை நிறுவனர் எடுத்த அதிரடி முடிவு'... 'ட்விட்டரில் CEO போட்ட ட்வீட்'... 'என்னப்பா நடக்குது, குழம்பி போன ஊழியர்கள்'... எதிர்காலம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியப் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் புரட்டிப்போட்ட சொமேட்டோவின் வெற்றி பல ஸ்டார்ட்அப் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது.

'Zomato துணை நிறுவனர் எடுத்த அதிரடி முடிவு'... 'ட்விட்டரில் CEO போட்ட ட்வீட்'... 'என்னப்பா நடக்குது, குழம்பி போன ஊழியர்கள்'... எதிர்காலம் என்ன?

டோர் டெலிவரி  மூலம் உணவை வீட்டிற்கே கொண்டு சென்று சேர்ப்பதில் பெரும் புரட்சி செய்த நிறுவனம் தான் சொமேட்டோ. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அபரிவிதமானது. சொமேட்டோ மூலம் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பும் பெற்றார்கள்.

Zomato cofounder Gaurav Gupta quits two months after IPO

இந்நிலையில் தற்போது சொமேட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனரும் உயர் அதிகாரியுமான கௌரவ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டும் அல்லாமல் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் சொமேட்டோ தளத்தில் டேபிள் ரிசர்வேஷன் பிரிவின் தலைவராக இணைந்தார் கௌரவ் குப்தா. இதன் பின்பு 2019ல் கௌரவ் குப்தா சொமேட்டோ நிறுவனத்தின் துணை நிறுவனராகப் பதவி உயர்வு பெற்றார்.

கௌரவ் குப்தா சொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றிய போது தான், சொமேட்டோ ப்ரோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்ட அறிமுகத்திலும் கௌரவ் குப்தா முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சொமேட்டோ ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் துணை நிறுவனர் பதவியிலிருந்த கௌரவ் குப்தா போன்ற உயர் அதிகாரி வெளியேறுவது அதன் பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது.

Zomato cofounder Gaurav Gupta quits two months after IPO

கௌரவ் குப்தா ராஜினாமா செய்தி வெளியான பின்பு சொமேட்டோ பங்குகள் தடுமாற்றம் அடைந்தாலும், மூடப்பட்ட வர்த்தகப் பிரிவின் தலைவர் வெளியேறும் காரணத்தால் தடுமாற்றத்தைச் சரி செய்துகொண்டு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. தற்போது சொமேட்டோ பங்குகள் 0.84 சதவீதம் உயர்ந்து 144.40 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

Zomato cofounder Gaurav Gupta quits two months after IPO

இதற்கிடையே சொமேட்டோ நிறுவனத்திலிருந்து கௌரவ் குப்தா வெளியேறுவது குறித்து சொமேட்டோவின் நிறுவனரான தீபேந்தர் கோயல் வருந்தி டிவீட் செய்துள்ளார், இதற்குக் கௌரவ் குப்தாவும் பதில் அளித்துள்ளார். கௌரவ் குப்தாவின் திடீர் ராஜினாமா ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சொமேட்டோ நிறுவனர் தீபேந்தர் கோயல், சொமேட்டோ அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போகிறது என ஊழியர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்