டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க்.. சோமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் போட்ட மாஸ் கமெண்ட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள நிலையில் ஸ்விக்கி மற்றும் சோமோட்டோ ஆகிய நிறுவனங்கள் இதுகுறித்து போட்ட கமெண்ட் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன்.
Also Read | "செய்யுற வேலையை லவ் பண்ணுங்க".. தோசை மாஸ்டரின் அசாத்திய திறமை.. பாராட்டிய தொழிலதிபர்..வைரல் வீடியோ..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பிறகு அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார் மஸ்க்.
விலை என்ன?
ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன்படி டிவிட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். தன்னுடைய கோரிக்கையை ட்விட்டர் நிர்வாகம் ஏற்காத பட்சத்தில் தன்னுடைய பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார் மஸ்க்.
தற்போது தான் நினைத்தபடியே 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகியவை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
என்ன வேகம்
இந்தியாவை சேர்ந்த சோமோட்டோ நிறுவனம்," நான் வழக்கமாக என்ன பீட்சா வேண்டும் என முடிவெக்கும் நேரத்தில் நிறுவனங்களை வாங்கிவிடுகிறார் எலான் மஸ்க்" என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல, இந்தியாவை சேர்ந்த மற்றொரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மஸ்க் அடுத்து வாங்க இருக்கும் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிவிட்டர், மோதிசூர் லட்டு, காஜூ கத்லி ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது ஸ்விக்கி நிறுவனம்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கியதை அடுத்து இந்தியாவின் சோமோட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் போட்ட கமெண்ட் குறித்து பலரும் வைரலாக பேசிவருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்