இனிமேல் உங்க வாழ்க்கை முழுவதும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்...! ஆனா 'அவங்க' மட்டும் ஆபீஸ் வரணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஜெரோதா நிறுவனம் தங்கள் பணியாளர்களில் 70% பேரை வீட்டில் இருந்தே நிரந்தரமாக வேலையைத் தொடரலாம் என அறிவித்துள்ளது.

இனிமேல் உங்க வாழ்க்கை முழுவதும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்...! ஆனா 'அவங்க' மட்டும் ஆபீஸ் வரணும்...! - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் மக்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாக அலுவலகத்திற்கு வேலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை பாதிக்கும் மேல் குறைந்து, வீட்டில் இருந்தே பணிபுரியும் வொர்க் ஃப்ரம் ஹோம் வழக்கம் அதிகமாக உள்ளது.

சில நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யவே அனுமதிக்கின்றனர்.

இந்தியாவின் மிகப்பெரிய புரோக்கரேஜ் நிறுவனமான ஜெரோதா,  சுமார் 50 லட்சத்துக்கு மேலே பயனாளர்களை வைத்துள்ளது. அதோடு புரோக்கிங் துறையில் நடக்கும் மொத்த பரிவர்த்தனையில் 15 சதவீதம் அளவுக்கு ஜெரோதா வசம் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அசுர வளர்ச்சியை அடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்.

இந்நிலையில் ஜெரோதா நிறுவனம் சி.ஓ.ஓ வேணு மாதவ், தங்கள் ஊழியர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'எங்கள் பணியாளர்களில் 70% பேர் விற்பனையில் மற்றும் ஆதரவுப்பணிகளில் தான் உள்ளனர். எனவே, இவர்கள் வீட்டிலிருந்து நிரந்தரமாக பணியைத் தொடரலாம்.

Zerodha 70% of its employees can continue work from home

மேலும் தொழில்நுட்ப குழு, நிர்வாக குழு மற்றும் மனிதவள மேம்பாட்டுக்குழுவின் சில உறுப்பினர்களும் வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை செய்யலாம். நேரடியாக பணியில் ஈடுபடும் கட்டாயம் உள்ளவர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்