VIVO IPL 2021 போட்டிகளை 100 நாடுகளில் ஒளிபரப்ப, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ளது, உலகின் முன்னணி OTT தளமான YuppTV!
முகப்பு > செய்திகள் > வணிகம்தெற்காசியாவுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதில், உலகின் முன்னணி OTT தளமாக விளங்குகிறது, YuppTV. இது தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் VIVO ஐபிஎல் 2021 போட்டிகளை ஒளிபரப்ப, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் YuppTV மூலம் 60 போட்டிகளைக் கொண்ட VIVO ஐபிஎல் 2021 போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் கண்டுகளிக்கலாம்.
கடந்த வருடம் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடைபெற்றது. தற்போது 2021ம் ஆண்டுக்கான போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளானது ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டிகளானது சென்னை, மும்பை, அகமதாபாத், டெல்லி, பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது.
Play off மற்றும் இறுதிப் போட்டிகளானது அகமதாபாத்தில் உள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, YuppTV ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் மற்றும் மலேசியா தவிர), மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மத்திய ஆசியா, நேபாளம், பூட்டான் மற்றும் மாலதீவுகள் என 100 நாடுகளில் மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய எதிர்பார்ப்பை உருவாக்கவுள்ளது.
இதுதொடர்பாக பேசிய YuppTV நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான உதய் ரெட்டி, “உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் மைதானத்தில் கிடைக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள் என்பதை YuppTV உறுதி அளிக்கிறது. இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளின் வளர்ச்சியில் YuppTVயின் பங்கு நிச்சயம் இருக்கும்”.
எங்களது வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டினை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்து YuppTVயில் பார்த்து ரசிக்க முடியும். YuppTVயானது உலக அளவில் மிகப்பெரிய இணையதள டிவி ஆகும். தெற்காசியாவில் 250க்கு மேற்பட்ட சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை 14 மொழிகளில் காணலாம்.
அந்த வகையில் உங்கள் வீட்டுற்கே ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானத்தைக் கொண்டு வரும் வகையில் இந்த ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என YuppTV தெரிவித்துள்ளது
For more information Visit: https://www.yupptv.com/cricket
மற்ற செய்திகள்