My India Party

'பிரபல IT கம்பெனியில்...' ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு...! '7,000 பேருக்கு ப்ரோமோஷன்...' - ஊழியர்கள் செம ஹேப்பி...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் புத்தாண்டு பரிசாக, சம்பள உயர்வை வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

'பிரபல IT கம்பெனியில்...' ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு...! '7,000 பேருக்கு ப்ரோமோஷன்...' - ஊழியர்கள் செம ஹேப்பி...!

விப்ரோ நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள CEO தியேரி டெலாபோர்ட்டே தலைமையில் இந்நிறுவனம் கடந்த ஐந்து மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையிலிருந்து அதிகளவிலான திட்டங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக விப்ரோ பங்குகள் சுமார் 70 % வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள 20 % ஊழியர்கள் அதாவது மிட் லெவல் C1 பேண்ட் முதல் அதற்கு மேல் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் 2021 ஜூன் 1 முதல் சம்பள உயர்வை அளிக்க உள்ளதாக விப்ரோ நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 2020-ல் விப்ரோ ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை.

தற்போது விப்ரோ ஊழியர்கள் அளித்த தகவல் படி இந்நிறுவனத்தின் ஆப்ஷோர் ஊழியர்களுக்கு 6 முதல் 8 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும், ஆன்சைட் ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விப்ரோ நிறுவன ஊழியர்கள் இந்தக் கொரோனா காலகட்டத்தில் சிறப்பான பணிகளைச் செய்து வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் கொண்டு சென்றதை அடுத்து விப்ரோ 2020-21 நிதியாண்டில் 3வது மற்றும் 4வது காலாண்டுக்கான வேரியபிள் பே-வை தனது ஊழியர்களின் 100 சதவீதம் முழுமையாகக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும், டிசம்பர் 1-ம் தேதி வெளியான தகவல் படி விப்ரோ நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சுமார் 7000 ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 3 வருடத்தில் பதிவ உயர்வு கொடுக்கப்பட்ட எண்ணிக்கை இந்த வருடம் சற்று அதிகம் என விப்ரோ நிறுவனம்  தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்