‘1 ஜிபி’ டேட்டா ‘35 ரூபாய்’... மீண்டும் ‘அதிரடி’ கட்டண ‘உயர்வா?’... வாடிக்கையாளர்களுக்கு ‘அதிர்ச்சி’ கொடுக்கும் ‘பிரபல’ நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > வணிகம்வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் கட்டணத்தை அதிகரிக்க விரும்புவதாக தொலைத் தொடர்புத் துறையிடம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சரிந்து கொண்டே போகும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் சந்தைப் பங்கு மற்றும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகை போன்றவற்றால் அந்நிறுவனம் பெரிய அளவிலான இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கட்டணங்களை சுமார் 7 மடங்கு உயர்த்த விரும்புவதாகவும், இந்த நடவடிக்கை சட்டரீதியான நிலுவைத் தொகையை செலுத்த உதவும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலைத் தொடர்புத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் டேட்டா கட்டண உயர்வை தவிர்த்து, அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் செய்ய விரும்புவதாகவும் அந்நிறுவனம் அதில் கூறியுள்ளது.
அந்நிறுவனத்தின் தற்போதைய மொபைல் டேட்டா கட்டணம் 1 ஜிபிக்கு ரூ 4 முதல் ரூ 5 வரை உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட பிற நிறுவங்களுடன் இணைந்து வோடபோன் ஐடியா அதன் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்திய 3 மாதங்களுக்குள் தற்போது இந்த கோரிக்கையை வைத்துள்ளது.