ஏற்கனவே ஒரே வீடியோ கால்-ல 900 பேர வேலையை விட்டு தூக்குன CEO.. இப்போ இப்படி ஒரு ஆர்டரா..அதிர்ந்துபோன ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல நிதி நிறுவனமான better.com தனது 35 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
பெட்டர்.காம்
அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்தியாவை சேர்ந்த விஷால் கார்க். இவர் கடந்த டிசம்பர் மாதம் ஒரே வீடியோ கால் மூலமாக தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், மேலும், 35 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் தற்போது தெரிவித்திருக்கிறது.
நஷ்டம்
கடந்த மூன்று காலத்தில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவினை எடுத்ததாகவும் கார்க் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது,"அதிகமான பணியாளர்களை வேலைக்கு சேர்த்ததை ஒப்புக்கொள்கிறோம். தவறான நபர்களை பணியில் அமர்த்திவிட்டோம். நான் தோற்றுவிட்டேன். கடந்த 18 மாதங்களாக நான் சரியான செயல்படவில்லை. இதனால் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.
மேலும், தொழிலாளர்கள் முதல்முறை தோல்வியைடைந்தால் ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் மீண்டும் தோல்வியடைய அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார் கார்க்.
பணி நீக்கம்
இந்நிலையில், தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 3000 ஊழியர்களை வெளியேற்ற கார்க் திட்டமிட்டிருக்கிறார். அப்படி பணியில் இருந்து வெளியேறுபவர்களுக்கு உரிய தொகை, இன்சூரன்ஸ் ஆகிய வசதிகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். கார்ப்பரேட், தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் பொறியியல் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வயதின் அடிப்படையில் இறுதிநாள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, 40 வயதுக்குட்பட்ட பணியாளர்கள் இந்தச் சலுகையை ஏற்றுக்கொள்வதற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசி நாளாகும், மேலும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் இந்தச் சலுகையை ஏற்க 21 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஒரே வீடியோ காலில் 900 பேரை பணிநீக்கம் செய்த கார்க், இப்போது மேலும், 3000 பேரை பணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக அறிவித்திருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
தொட்டால் ஷாக்.. லட்சத்துல வாங்கி கோடில விற்கலாம்.. கூட்டாளிகளின் நூதன உருட்டால் அதிர்ந்துபோன நபர்..!
மற்ற செய்திகள்