'ஐடி கம்பெனிகளில்...' 'அடுத்த ரவுண்ட் ஆட்குறைப்புக்கு ரெடி ஆயிட்டாங்களாம்...' - அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நிறுவனங்கள் இரண்டாவது முறையாக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உள்ளதாக கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க தனியார் துறை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஐடி கம்பெனிகளில்...' 'அடுத்த ரவுண்ட் ஆட்குறைப்புக்கு ரெடி ஆயிட்டாங்களாம்...' - அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்...!

கடந்த  வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் 8 மாதங்கள் கடந்தும் ஒரு முடிவுக்கு வராமல் போய் கொண்டிருக்கிறது. மேலும் மக்களின் வாழ்வாதாரங்களையும் நாடுகளின் பொருளாதார நிலையையும் கேள்விக்குறியாக்கி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிறு குறு வியாபாரிகள் மட்டுமில்லாமல் தலை சிறந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களின் வேலையை இழந்து வருவது உலகறிந்ததே.

இந்த நிலையில் முதல்கட்ட பணியிழப்பு செய்தது போக, தற்போது பணிபுரியும் ஊழியர்களையும் இரண்டாம் கட்டமாக பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை வெளிவந்த கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க தனியார் துறை நடத்திய ஆய்வில், தற்போது பணியில் இருக்கும் மொத்த ஊழியர்களில் இன்னும் 26% பேர் முதலாளிகளால் பணி நீக்கம் செய்துள்ளனர் என கூறியுள்ளனர். அதாவது வேலைகளுக்குச் சென்ற 5 தொழிலாளர்களில் 3 பேர் பணிநீக்கம் அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய கார்னெல் சட்டப் பள்ளியின் மூத்த சக மற்றும் துணை பேராசிரியரான டேனியல் ஆல்பர்ட் பிசினஸ் இன்சைடர், 'பல நாடுகளில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பணியமர்த்தப்பட்டவர்களில் பலர் அந்த பணிகளில் தொடர முடியாமல் போகலாம்' எனக் கூறியுள்ளார்.

இந்த கணக்கெடுப்பு கடந்த ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1-க்கு இடையில் நடத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸின் அதிகப்படியான தாக்கத்தை எதிர்கொள்ளாத நாடுகளும் மாநிலங்களும் இந்த வேலை நீக்கத்தால் அதிக அளவில் பாதிப்படையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து கூறிய ஆல்பர்ட், மார்ச் மாதத்திலிருந்து தற்போது வரை அமெரிக்காவில் சுமார் 37% அமெரிக்கர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 57% பேர் மீண்டும் ஊதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதியத்தில் திரும்பப் பெற்றவர்களில் 39% பேர் சம்பளம் வழங்கப்பட்டாலும், வேலைக்குத் திரும்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினர்.

மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் வேலை இழந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்காவிட்டால், அது "மக்களின் பொருளாதார தேவைகளை மேலும் பாதிக்கும்" என்று கூறினார்.

மற்ற செய்திகள்