'எச்-1 பி விசா வச்சுருக்கவங்க நிறைய சம்பளம் வாங்குறாங்க...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அரசு...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்காவில் எச் -1 பி விசா வைத்திருக்கும் 5 பேரில் 4 பேர் அமெரிக்காவின் சராசரி ஊதியத்தை விட 20 சதவீதம் அதிக சம்பளம் வாங்குவதாக அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.

'எச்-1 பி விசா வச்சுருக்கவங்க நிறைய சம்பளம் வாங்குறாங்க...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அரசு...!

அமெரிக்காவில் இருக்கும் கேடோ நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி,  எச் -1 பி  ஊழியர்களுக்கான சராசரி ஊதியம், 41,00,461 லட்சம் எனவும் ஆனால் அவர்களின் சராசரி ஊதிய நிர்ணயம், 6,83,619 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் H-1B முதலாளிகளில் 78 சதவிகிதத்தினர் தங்களது சராசரி நடைமுறையில் உள்ள ஊதியத்தை விட அதிக சலுகைகளைக் கொண்டுள்ளதாகவும், கேடோ இன்ஸ்டியூட்டின் கொள்கை ஆய்வாளர் டேவிட் ஜே பியர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் அமெரிக்காவின் மற்றொரு பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுக்கு இது முரணானது ஆகும். அதில்  H-1B தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் வேலைக்கான உள்ளூர் சராசரி ஊதியத்திற்கு கீழே சம்பளம் பெறுவதாகக் கூறியது.

அது தொடர்பாக கேடோ இன்ஸ்டிடியூட் சராசரி ஊதியத்தின் வரையறை எவ்வாறு விளக்கப்படுகிறது என்ற வேறுபாட்டை கூறியுள்ளது.

தொழிலாளர் துறை திறன்கள், அனுபவம் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு ஊதிய நிலைகளை வழங்குகிறது.

அனைத்து எச் -1 பி முதலாளிகளும் சராசரி ஊதியத்தை விட அதிகமாக செலுத்துவதாக கேடோ இன்ஸ்டியூட் நிறுவனம் கண்டறிந்துள்ளது. சந்தை ஊதியம் என்பது அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கான சராசரி ஊதியத்தையும், அனுபவத்தையும், திறன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

எல் 1 மற்றும் எல் 2 ஊதிய மட்டங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் தற்போதுள்ள அமெரிக்க ஊதிய விகிதத்தை விட அதிக ஊதியங்களைப் பெறுகிறார்கள் என்று டிஓஎல் தரவு காட்டுகிறது.

மேலும் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான H-1B விசாக்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் பிற நாடுகளிலிருந்து, முதன்மையாக இந்தியாவில் இருந்து குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களைக் கொண்டு வருவதன் மூலம் அமெரிக்க மக்கள் வேலை இழப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்டு தோறும் வழங்கப்படும் எச் -1 பி விசாக்களில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவை சேர்ந்த மக்களுக்கு பங்கு உண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த நான்கு ஆண்டுகளில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்,  எச் -1 பி விசாக்களை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்கியதையும், விசா விண்ணப்பதாரர்களுக்கு மறுப்பு விகிதங்களை 30 சதவீதமாக உயர்த்தியதையும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளித்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்