'இத்தனை பாதிப்புக்கு நடுவிலும்'... 'புதிதாக 12,000 பேருக்கு வேலை'... 'பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்இன்ஃபோசிஸ் அடுத்து வழங்க உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக 2017ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது முன்னர் சொன்னதை விடக் கூடுதலாக அமெரிக்கர்களுக்கு இன்ஃபோசிஸ் வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. அதாவது 2022ஆம் ஆண்டுக்குள் 12,000 அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் இண்டியானா, வட கரோலினா, கனெக்டிகட், ராஷ்டி ஐஸ்லாந்து, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய நகரங்களில் 6 தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை இன்ஃபோசிஸ் நிறுவியுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் உள்ளூர் ஆட்களையே பணிக்கும் அமர்த்தும் நோக்கத்தில் சென்ற நிதியாண்டில் 78 சதவீத முத்த நிர்வாகிகளை அமெரிக்கர்களாக பணிக்கு அமர்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்