'சம்பளமே ஒழுங்கா குடுக்கல'... 'பிரபல நிறுவனத்தின் அடுத்தடுத்த விதிமீறல்களால்'... 'அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு'... 'ஹேப்பி மோடில் ஊழியர்கள்!...
முகப்பு > செய்திகள் > வணிகம்சாவண்டிஸ் நிறுவனத்தின் மீதான விதிமீறல்களை சரி செய்ய 3,45,000 அமெரிக்க டாலரை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சாவண்டிஸ் (Savantis) எனும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவிலும் செயல்பட்டு வரும் நிலையில், கன்சல்டிங், டெக்னாலஜி, ஸ்டாஃப்பிங் போன்ற பல வேலைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. H1B விசா வைத்திருந்த பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை அதிகம் வேலைக்கு அமர்த்தியுள்ள இந்நிறுவனம், கடந்த ஜனவரி 2014 முதல், ஜூன் 2018 வரையிலான கால கட்டத்தில் H1B விசா ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாகவும், குறிப்பிட கால இடைவெளியிலும் கொடுக்கவில்லை என US Immigration and Customs Enforcement அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் H1B விசா வைத்திருந்தவர்கள் வேலைக்கான விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கு முன்பே, செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தச் சொல்லியும் இந்நிறுவனம் தவறான வழிமுறையை பின்பற்றியுள்ளது.
இதுகுறித்து அறிந்த நியூஜெர்ஸி மாகாண அட்டர்னி மற்றும் அமெரிக்காவின் தொழிலாளர் துறை (Department of Labor), சாவண்டிஸ் நிறுவனத்தின் மீதான இந்த விதிமீறல்களை சரி செய்ய, 3,45,000 அமெரிக்க டாலரை செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சாவண்டிஸ் நிறுவனம் செலுத்தப்போகும் இந்த பணத்தை, முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்களுக்கே வட்டியுடன் திருப்பிச் செலுத்த பயன்படுத்தப் போவதாகவும் US Immigration and Customs Enforcement கூறியுள்ளது. இருப்பினும் எத்தனை ஊழியர்கள் இந்த செட்டில்மெண்டில் பயன்பெறுவார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
மற்ற செய்திகள்