"கொரோனா போட்டு பொரட்டி எடுத்துருச்சு,,.. ஆளுங்கள அனுப்பிட வேண்டியது தான்",,.. முன்னணி விமான நிறுவனத்தின் முடிவால் கலங்கிப் போன 16,000 'ஊழியர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.
இந்த நெருக்கடியை சமாளிக்க வேண்டி, பல விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இருந்த போதும், தொடர்ந்து நஷ்டத்தை பல விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கொரோனா பிடியில் சிக்கித் திணறி வருகிறது. நிறுவனத்தின் நெருக்கடியை சமாளிக்க வேண்டி அமெரிக்க அரசு, 25 பில்லியன் டாலர்களை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மார்ச் மாதம் நிதியாக வழங்கியது.
இதனைக் கொண்டு, ஓரளவுக்கு விமான நிறுவனம் சமாளித்த நிலையில் அமெரிக்க அரசு கொடுத்த நிதி இந்த மாத உறுதியுடன் முடிவடைகிறது. நிலைமையை சரி செய்ய மேலும் 25 பில்லியன் டாலர்களை யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க அரசு இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இதனால், அந்த நிதி கிடைக்க காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது.
யுனைடெட் விமான நிறுவனத்தில் சுமார் 90,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வரும் நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக 16 ஆயிரத்து 370 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் இந்த பணிநீக்க நடவடிக்கை நடைமுறைக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவி தரவில்லை என்றால் இது தான் ஒரே வழி எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்