இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலுமுள்ள பல பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நெருக்கடி சூழ்நிலையை சந்தித்து வரும் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

இந்த 'கொரோனா'வால பெருத்த 'நஷ்டம்'பா... "நீங்களே கெளம்புனா நல்லா இருக்கும்"... ஊழியர்களுக்கு செக் வைத்த முன்னணி 'வங்கி'!!!

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வங்கியான நாட்வெஸ்ட் வங்கி கொரோனா தொற்று காரணமாக தங்களது 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் லண்டனில் அமைந்துள்ள வங்கி கிளை ஒன்றையும் மூட முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பணம்  இழப்பு ஏற்படாமல் இருக்க, தங்களது செலவுகளை குறைக்க வேண்டி இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

அதே போல 500 ஊழியர்களை தாங்களாக அனுப்பாமல் தன்னார்வத்துடன் யாராவது பணிநீக்கம் பெற விரும்பினால் அவர்களுக்கு சிறந்த ஒரு தொகை அளித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்  ஊழியர்கள் உட்பட 800 பேர் வேலையிழக்க வாய்ப்புள்ளது. லண்டனில் உள்ள கிளை வங்கியை மூட முடிவு செய்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் 2500 ஊழியர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

'உலகின் பல முன்னணி வங்கிகள் இதே போன்ற நிலையல்ல தவித்து வருகிறது. நிதி நெருக்கடிக்குப் பின்னர் நாங்கள் கண்ட சிக்கன நடவடிக்கைகளின் மறுபடியும் இருக்கக்கூடாது' என அந்த வங்கியின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்