"தம்பி நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்குக்கே Tough கொடுத்த மாணவர்.. மஸ்க்கின் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் குறித்த தகவல்களை வெளியிட்டுவந்த ஒருவரின் அக்கவுண்ட்டை ட்விட்டர் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
Also Read | அன்னைக்கி டீக்கடையில் வேலை, இன்னைக்கி 'IAS' அதிகாரி.. கொஞ்சம் கொஞ்சமா போராடி சாதிச்சு காட்டிய நபர்.. சபாஷ்!!
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.
தொழில்துறை, ஆராய்ச்சி, முதலீடு என இயங்கிவரும் மஸ்க் சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த ஜெட்டை தன்னுடைய சொந்த பயணங்களுக்கு பயன்படுத்திவந்தார் மஸ்க். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜாக் ஸ்வீனி என்னும் மாணவர் எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தின் இயக்கம் குறித்த தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதாவது, மஸ்கின் ஜெட் தற்போது எங்கே இருக்கிறது? அடுத்து எங்கே செல்லும்? எந்த விமான நிலையத்தில் எத்தனை மணி நேரம் நிற்கும் என அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் ட்விட்டரில் பதிவிட துவங்கினார்.
இந்த விஷயத்தை அறிந்த மஸ்க், இந்த தகவல்களை நீக்குமாறு ஜாக்கிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ட்விட்டரில் இருந்து தன்னுடைய ஜெட் விமானம் குறித்த தகவல்களை நீக்க, 5000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் மஸ்க் தனது மெசேஜில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஜாக் வைத்த கோரிக்கை வேறுவிதமாக இருந்தது. எலான் மஸ்க்கிடம் 3 கோரிக்கைகளை வைத்திருந்தார் 19 வயதான ஜாக். தனக்கு 50,000 டாலர்கள் வழங்கவேண்டும். அவரது நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் பயில வாய்ப்பு வழங்கவேண்டும் அல்லது டெஸ்லா காரை வழங்க வேண்டும் என டீல் பேசியிருக்கிறார் ஜாக்.
இந்த நிலையில்தான், ஜாக்கின் இந்த பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. தனிப்பட்ட நபர்களின் பயண விபரங்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை தொடரும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,"எந்த ஒரு தனிநபரின் நிகழ்நேர இருப்பிடத்தை கண்காணித்துவரும் கணக்குகள் முடக்கப்படும். அதனை பகிரும் நபர்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். பார்வையிட்ட இடங்களை சற்று தாமதமாக பதிவிடுவது பாதுகாப்புக்கு எவ்வித சிக்கலும் இல்லை. ஆகவே அவற்றிற்கு விலக்குகள் அளிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் குறித்த விபரங்களை வெளியிட்டு வந்த மாணவர் ஒருவரின் அக்கவுண்ட்டை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி இருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்