கொத்துக்கொத்தாக 'பணிநீக்கம்'... ஐடி ஊழியர்களுக்கு 'காத்திருக்கும்' அடுத்தடுத்த அதிர்ச்சிகள்... ஜூன் காலாண்டில் மட்டும் 'இத்தனை' ஆயிரம் பேரா?
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்த ஜூன் காலாண்டில் மட்டும் எக்கச்சக்கமான பேரை ஐடி நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளன.
இந்திய ஐடி துறையை பொறுத்தவரை சுமார் 50 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர். இதில் டிசிஎஸ், காக்னிசண்ட், டெக் மஹேந்திரா, இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் என முன்னணி ஐடி நிறுவனங்கள் மட்டும் 13 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி இருக்கின்றன.
இந்த நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் கடந்த ஜூன் 2020 காலாண்டில், முன் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையை விட சுமார் 20,000 ஊழியர்களின் எண்ணிக்கையை (Head Count) குறைத்து இருக்கிறார்களாம். டிசிஎஸ் நிறுவனம் 4788 பேரையும், காக்னிசண்ட் 10,000 பேரையும் , டெக் மஹேந்திரா 2000 பேரையும், இன்போசிஸ் 3138 பேரையும், விப்ரோ 1018 பேரையும் பணிநீக்கம் செய்து இருக்கிறார்களாம்.
இத்தனைக்கும் ஜூன் காலாண்டில் ஐடி நிறுவனங்கள் பெருத்த சரிவை சந்திக்கவில்லை. தற்போது இதுதான் ஐடி ஊழியர்களின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால். ஐடி கம்பெனிகள் அதிகம் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இருக்கிறார்கள். அதோடு புதிதாக வேலைக்கு எடுப்பது, வேலைக்கு எடுத்தவர்களை வேலையில் சேர்ப்பது எல்லாமே தாமதமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் ஐடி ஊழியர்கள் தங்களை தினம்தினம் அப்டேட் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஏனெனில் அவ்வப்போது சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஐடி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன. கொரோனா காரணமாக மொத்த உலகமும் முடங்கி போய் இருப்பதால் நினைத்தாற்போல வேலை தேடிக்கொள்வது எல்லாம் கானல் நீராக மாறிக்கொண்டு இருக்கிறது. இதனால் கொரோனா தாக்கம் முடிந்த பின்னாவது ஐடி நிறுவனங்கள் பழைய நிலையை எட்டுமா? இல்லை நிலைமை மேலும் மோசமாகுமா? என்ற கேள்வி ஐடி துறையை ஆட்டம் காணவைத்து இருக்கிறது.
மற்ற செய்திகள்