இது தெரியாமல் home loan வாங்காதீங்க.. உங்க உழைப்பு, பணம் எல்லாம் வீணாகிடும்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்சென்னை: வீட்டு கடன் வாங்கு போது மறந்தும் சில தவறுகளை செய்துவிடாதீர்கள். அப்படி செய்தால் உங்களை உழைப்பு, பணம் மொத்தத்தையும் வீணாக்கிவிடும் என்கிறார்கள்.. வீட்டு கடன் வாங்கி அனுபப்ப்பட்டவர்கள். அவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த கட்டுரையை எழுதி உள்ளேன். விஷயத்திற்கு வருவோம்.
புதிய வீடு கட்ட, கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்க, பழைய வீட்டை புதுப்பிக்க கடன் வாங்கலாம். இருக்கும் கடனிலேயே வீட்டுக்கடனுக்கு தான் வட்டி குறைவு. சிலர் வருமான வரி பிரச்சனைக்காக வீட்டுக்கடன் வாங்குகிறாக்ரள். அந்த தவறை செய்ய வேண்டாம். அதேபோல் உங்கள் வருமானத்தில் 25 சதவீதற்கு மேல் கடன் அளவு போகக்கூடாது.
நீங்கள் வாங்கும் கடன் என்பது உங்கள் மொத்த வீட்டு பட்ஜெட்டில் 50 சதவீதத்திற்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வங்கிகள் தரும் அதிகபட்ச கடனை வாங்காதீர்கள். உங்கள் தேவைக்கு மட்டும் வாங்குங்கள். அதிக பணம் தருகிறார்களே என்று வாங்கி இஎம்ஐஇல் விழுந்துவிடாதீர்கள்.
சிலர் குறைவான வட்டி தானே அதிகபட்ச கடன்தொகையை வாங்கி வீட்டுக்கு கொஞ்சம் செலவு செய்து மற்ற பணத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். அதை செய்யவே கூடாது.
இடம் வைத்திருந்தால் அரசு ஊழியர் என்றால தைரியமாக கடன் வாங்கலாம். அதுவும் உங்கள் வருமானத்தில் 25 சதவீதற்கு மேல் கடன் வாங்காதீர்கள். தனியார் ஊழியர்கள் என்றால், பணி பாதுகாப்பு இருக்காது எனவே, கவனமாக கடன் வாங்குங்கள். பொதுத்துறை வங்கிகளில் முடிந்த வரை கடன் வாங்க முயற்சி செய்யுங்கள், முடியாத பட்சத்தில் தனியார் வங்கிகளில் வாங்குங்கள். வருமான வரி தாக்கல் செய்பவர்கள் என்றால் எளிதாக கடன் கிடைக்கும். அதைவிட குறைவான சம்பளம் என்றால் சேலரி ஸ்லிப் கொடுக்க வேண்டும். அதை ஆராய்ந்து உங்களுக்கான கடன் மற்றும் வட்டியை நிர்ணயிப்பார்கள்.
எந்தவொரு வங்கியிலும் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு உங்களது கடனுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், நிலையானதா (Fixed rate) அல்லது ஃப்ளோட்டிங் (Floating) விகிதமா? என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதில் என்ன வித்தியாசம் உள்ளது. இதில் நிலையான விகிதம் எனில், ஆரம்பம் முதல், முடிவு வரையில் நீங்கள் செலுத்தும் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. இதே ஃப்ளோட்டிங் விகிதம் எனில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும்.
கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களது வீட்டுக் கடனில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில் இதனடிப்படையில் தான் வங்கிகள் உங்களுக்கு கடன் வழங்கலாமா? வேண்டாமா? அப்படி கொடுத்தாலும் வட்டி விகிதம் எவ்வளவு கொடுக்கலாம் என தீர்மானிக்கின்றன. உதாரணத்திற்கு உங்களது கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், உங்களுக்கு எளிதில் வீட்டுக் கடன் அனுமதிக்கப்படலாம்.
வீட்டுக் கடன் மட்டும் அல்ல, எந்தவொரு கடன் வாங்கினாலும் சரி, இதனை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய கடனைமுன் கூட்டியே செலுத்தினால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது வங்கிக்கு வங்கி வேறுபடும். ஆக அதனை தெரிந்து கொள்வது நல்லது.
வங்கிக் கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாக உள்ளன. ஏனெனில் சில வங்கிகள் 0.4%ல் இருந்து ஆரம்பிக்கின்றன. இது அதிகபட்சம் 1% வரை உள்ளது. ஆக அதனையும் கவனத்தில் கொண்டு செயல்படும்போது, உங்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.
வீட்டுக்கடன் கட்ட போகிறீர்கள் என்றால் மொத்தமாக குறிப்பிட்ட தொகை செலுத்த அனுமதி உண்டு. அது எத்தனை முறை என்பதையும் எவ்வளவு பணம் கொடுத்து இஎம்ஐயை குறைக்கலாம் என்பதையும் தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.
இதேபோல் 15 வருடத்தில் கட்டி முடிக்கலாம் என்பதை 20 வருடமாக கூட எடுக்கலாம். அப்படி எடுக்கும் நீங்கள் 15 வருடத்திற்கான இஎம்ஐ தொகை மாதம் 22 ஆயிரம் வருகிறது என்றால். 20 வருடத்தில் அதை விட 6 ஆயிரம் அதிகமாக வரும். அதை மாதம் மாதம் ஒரு பண்டில் போடலாம். 10 சதவீத நிலையான வட்டி தரக்கூடிய மியூட்சல் பண்ட் உள்ளிட்ட சில வற்றில் போடலாம். 15 வருடம் சேமித்து வந்தால், முடிவில் 26 லட்சம் வரையில் கிடைக்கலாம். அதேநேரம் உங்கள் முடிக்க வேண்டிய இஎம்ஐ 20க்கள் தான் இருக்கும். இதன் மூலம் 6 லட்சம் வரை உங்களுக்கு சேமிப்பு கிடைக்கும். இது உதாரணமே முழு தகவலுக்கு நிதி ஆலோசகர்களை கேளுங்கள்.
மாதம் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வீட்டு வாடகையில் குடியிருப்பவர்கள் 20 ஆயிரம் இஎம்ஐக்கு மாறுவது ஆபத்து, அதேநேரம் 20 ஆயிரம் வாடகை கொடுப்பவர்கள், அதை இஎம்ஐஎல் போட்டு வீடு வாங்கலாம் என்றால், அதாவது வாடகை பணத்திலேயே இஎம்ஐ என்றால்தாரளமாக வீடு வாங்கலாம். மற்றபடி 8ஆயிரம் அல்லது அதற்கு கீழ் வீட்டு வாடகை உள்ளவர்கள் 20 லட்சம், 30 லட்சம் என்று கடன் வாங்குவது ஆபத்து, மாதம் நீங்கள் வீட்டு வாடகை போக உள்ள தொகை நிலையான வட்டிதரக்கூடிய முதலீட்டில் போட்டு வந்தால் உங்களுக்கு பலலட்சங்கள்கிடைக்கும். அதை வைத்து அதன்பிறகு வீடு கட்டுஙகள். முன்பே கடனில் மாட்டி சிக்கிக்கொள்ளாதீர்கள். இஎம்ஐ என்பது உங்கள் வருமானத்தில் 25 சதவீதற்கு மேல் போகவே கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே சரியாகும். மற்றபடி உங்கள் ரிஸ்க்குதான்.
மற்ற செய்திகள்