‘எல்லாருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்’.. ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிறுவனம்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் வேறலெவல்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அமெரிக்காவில் நிறுவனம் ஒன்று ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 3.87 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘எல்லாருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்’.. ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிறுவனம்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் வேறலெவல்..!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு சூதாட்ட விடுதி, தங்களது பணியாளர்களுக்கு 5000 டாலர் போனஸ் (ரூ. 3.87 லட்சம்) கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. தி காஸ்மோபாலிட்டன் (The Cosmopolitan) என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பில் மெக்பீத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் உள்ள 5400 ஊழியர்களுக்கும் போனஸிற்கான மொத்த செலவு 27 மில்லியன் டாலர் (ரூ. 208 கோடி).

This company gives Rs 3.86 lakh bonus to each of employees

இதுகுறித்து கூறிய தி காஸ்மோபாலிட்டனின் தலைமை மக்கள் அதிகாரியான டேனியல் இ எஸ்பினோ, ‘ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் அறைகளைச் சுத்தம் செய்தாலும், உணவு சமைத்தாலும், அட்டைகளை விநியோகித்தாலும், பானங்கள் விற்பனை செய்தாலும் அல்லது மேசையில் வேலை செய்தாலும் சரி, அனைத்திலும் வித்தியாசமாக பணியாற்றி உள்ளீர்கள். அதற்காக இந்த வெகுமதி’ என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் இதழின் சிறந்த வேலையளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக லாஸ் வேகாஸின் தி காஸ்மோபாலிட்டன் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து 8 ஆண்டாக மனித உரிமைகள் பிரச்சாரத்தின் ‘வேலை செய்வதற்கான சிறந்த இடங்கள்’ என்ற பட்டியலில் முதலிடத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

EMPLOYEES, BONUS

மற்ற செய்திகள்