RRR Others USA

ஆடை, அணிகலன்கள் முதல் ஓலா, உபெர் வரை... ஜனவரி 1 முதல் எதெல்லாம் விலை ஏறப் போகிறது?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

சரக்கு மற்றும் சேவை வரி முறையில் புது மாற்றங்கள் அமல் ஆக உள்ளதால் பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர உள்ளது.

 

ஆடை, அணிகலன்கள் முதல் ஓலா, உபெர் வரை... ஜனவரி 1 முதல் எதெல்லாம் விலை ஏறப் போகிறது?

வருகிற 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறைகளில் புதிய வரி உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜவுளிகள், துணிகள், காலணிகள் ஆகிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக அந்த பொருட்களின் விலைகளும் அதிகரிக்க உள்ளது.

டீச்சரும், 10-ம் வகுப்பு மாணவனும் உயிருக்கு உயிரா 'லவ்' பண்ணி கல்யாணம்! ஆசிரியை மீது பாய்ந்த சட்டம்!

இந்த புதிய ஜிஎஸ்டி வரி முறைகள் வருகிற புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2022 முதல் அமல் செய்யப்பட உள்ளது. ஜவுளி, துணி ரகங்களைப் பொறுத்த வரையில் இத்தனைக் காலம் ஆக 5% ஆக இருந்த ஜிஎஸ்டி ஜனவரி 1-ம் தேதி முதல் 12% ஆக உயர உள்ளது. இதனால் ஆடைகள் அனைத்தும் விலை உயரும்.

Things to get costlier from Jan 1 with new GST

1,000 ரூபாய் முதலான துணிகளுக்குத் தான் ஜிஎஸ்டி வரி 5% முதல் 12% ஆக உயர உள்ளது. ஜவுளி துணிகள் மட்டுமல்லாது போர்வைகள், டேபிள் துணிகள், கைக்குட்டை வரை அனைத்தும் விலை உயர உள்ளது. அதேபோல், 1,000 ரூபாய் முதலில் இருந்து விற்பனை ஆகும் காலணிகள் அனைத்தின் ஜிஎஸ்டி வரியும் 5% முதல் 12% ஆக உயர உள்ளது.

புத்தாண்டு முதல் ஓலா, உபெர் ஆகிய செயலிகள் மூலம் பயணம் செய்வதற்கான விலையும் உயர உள்ளது. இந்த செயலிகள் அல்லது சாதாரணமாக ஆட்டோ பிடித்தால் அதற்கெல்லாம் ஒரே விலை வழக்கம் போல்தான் இருக்கும். ஆட்டோவை ஓலா, உபெர் மூலம் புக் செய்தால் மட்டுமே இந்த விலை உயர்வு பொருந்தும்.

Things to get costlier from Jan 1 with new GSTஇதேபோல் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் அதிகரிக்க உள்ளன. தற்போது ஆன்லைன் செயலிகள் மூலம் உணவு டெலிவரி செய்தால் உணவகங்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி இருந்தது. ஆனால், இனி ஜொமேட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்களும் 5 சதவிகித ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

GST, GST RISE, TEXTILES, OLA, ஜிஎஸ்டி உயர்வு, விலை உயர்வு, ஓலா

மற்ற செய்திகள்