ஒரே ஒரு 'புள்ளிய' மாத்த போய்... 'லம்பா 2.28 கோடி ரூபாய் கைவிட்டு போயிடுச்சே...' நடந்தது என்ன...?
முகப்பு > செய்திகள் > வணிகம்கடந்த தலைமுறையில், பணத்தை முதலீடாக்க தங்க நகை வாங்குவது, பங்குகள் வாங்குவது என ஒரு சில வழிகள் மட்டுமே இருந்தது. இப்போது அதெல்லாம் பழைய தலைமுறை காரர்கள் செய்கிற காரியமாக விட்டது.
நவீன டிஜிட்டல் காலத்தில் கிரிப்டோ கரன்சி, அதை பயன்படுத்தி NFT வாங்குவது என உலக மக்கள் பலருடைய நவீன முதலீடு சார்ந்த ட்ரெண்டாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கவனம் செலுத்த தவறியதால் NFT விற்பனையில் ஒரே ஒரு தசம புள்ளியை மாற்றி வைத்துள்ளார் குரங்கு பொம்மை NFT-யின் உரிமையாளர் ஒருவர். இந்த தவறை செய்ததால் 2.97 லட்சம் அமெரிக்க டாலர்களை இழந்து மன வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றான எத்திரியம் கரன்சியாக அந்த உரிமையாளர் தன்னிடமிருந்த NFT-யை விற்பனை செய்யும் விதமாக பட்டியல் இட்டுள்ளார். அவர் 75 எத்திரியம் என்ற விலைக்கு பதிலாக 0.75 எத்திரியம் என அதனை பட்டியல் செய்துள்ளார்.
இந்த தசம புள்ளிகளில் செய்த சின்ன தவறினால் அவருக்கு 2.97 லட்சம் அமெரிக்க டாலர்கள் அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 2.28 கோடி ஆகும். விற்க வேண்டிய அந்த குரங்கு பொம்மை NFT-யை வெறும் 3000 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி 2.28 லட்சம் ரூபாய்க்கு அவர் விற்பனை செய்துள்ளார்.
அந்த NFT-யை வாங்கியவர் தனக்கு அது தாமதமின்றி கிடைக்க வேண்டுமென விரும்பிய காரணத்தினால் கூடுதலாக 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலுத்தி வாங்கியுள்ளார்.
3000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர் இதுகுறித்து கூறும்போது, "சிறிய கவனக்குறைவினால் பெரியத் தொகை பறிபோய் விட்டதே ” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்
மற்ற செய்திகள்