'அங்க வர்றான் பாரு அவன விடாத'... 'மொபைலும் கையுமாக பப்ஜி விளையாடிய இளைஞர்கள்'... வாயை பிளக்க வைக்கும் பப்ஜியின் வருட வருமானம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் முதல் பலரைக் கட்டிப்போட்ட விளையாட்டு என்றால் அது பப்ஜி கேம் தான். கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கேம் இளைஞர்கள் முதல் பல பிரபலங்கள் வரை பிரபலமானது. எப்போது பார்த்தாலும் அவன விடாத டா, சுடு டா என அந்த கேமில் மூழ்கிய பலரும் கொடுத்த அலப்பறைகள் என்பது கொஞ்ச நஞ்சம் அல்ல. இதனாலே வீட்டிலிருந்த பலரும் கடும் எரிச்சலுக்கு ஆளானார்கள்.

'அங்க வர்றான் பாரு அவன விடாத'... 'மொபைலும் கையுமாக பப்ஜி விளையாடிய இளைஞர்கள்'... வாயை பிளக்க வைக்கும் பப்ஜியின் வருட வருமானம்!

அதிலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கி இருந்த காரணத்தினால் பப்ஜி கேமின் பயன்பாடு என்பது அதிகமாக இருந்தது. இதனால் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இந்த கேமிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது இளைஞர்களின் எதிர்காலத்தை அடியோடு பாதிக்கும் என்பதால் இதுபோன்ற மொபைல் கேமிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக எழுந்தது.

The amount of money PUBG made in 2020 is 2.6 billion

இதையடுத்து பப்ஜி கேம் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பப்ஜி கேமின் பயன்பாடு இந்தியாவில் அதிகம் என்பதால் இந்த தடையானது அந்த நிறுவனத்திற்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த சூழ்நிலையில் பப்ஜி கேமின் வருட வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த வருடத்தில் மட்டும் 2.6 அமெரிக்க டாலர்களை வருமானமாக அந்த நிறுவனம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 64.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மற்ற செய்திகள்