பாருங்கப்பா, இது தான் நான் 'வரி' செலுத்த போற தொகை...! வரியே இவ்வளவுன்னா வருமானம்...? - 'மாஸ்' காட்டும் எலான் மஸ்க்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்காவின் அதிகம் வரி செலுத்தும் மனிதராக டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சுமார் 27,840 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க்கை குறித்து ஒரு செய்தியாவது ஒரு நாளில் வந்துவிடும். இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற விருதையும் அளித்துள்ளது.
இந்நிலையில் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் தன் சொத்துமதிப்பான 27,840 கோடி டாலரில் 1400 கோடி டாலர்களை எலான் மஸ்க் தன்வசம் வைத்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.2.11 லட்சம் கோடி. இதன் காரணமாக 2021ஆம் ஆண்டு மட்டும் எலான் மஸ்க் ஏறக்குறைய 1200 கோடி டாலர் வரை வரி செலுத்தலாம் எனத் தெரிகிறது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின பங்குகள் பங்குச்சந்தையில் அனைவரையும் நடுங்க விடுவதால் மஸ்க்கிற்கு வருமானம் கொட்டுகிறது. ஒருவேளை இந்த ஆண்டு எலான் மஸ்க் 1200 கோடி டாலர் வரி செலுத்தினால், அது அமெரிக்காவில் உள்துறைக்கு மிகப்பெரிய அளவில் வருவாயாக இருக்கும் என அமெரிக்க பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் சென்ற வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எலிசபெத் வாரன் மஸ்க்கை காட்டமாக பேசினார். அதில் அவர் கூறியதாவது, 'எலான் மஸ்க், மக்களுக்கு இலவசமாக உதவி செய்து வரிச்சலுகை பெறுவதை நிறுத்திவிட்டு அரசுக்கு முறையாக வரி செலுத்த வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் '2021-ஆம் ஆண்டு பாருங்கள் அமெரிக்காவில் இதுவரை யாரும் செலுத்தாத தொகையை நான் வரியாகச் செலுத்துவேன்' என பதிலடி கொடுத்துள்ளார்.
For those wondering, I will pay over $11 billion in taxes this year
— Elon Musk (@elonmusk) December 20, 2021
மற்ற செய்திகள்