'ஏற்கனவே கொரோனா வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'!?.. பிரபல ஐடி நிறுவனத்திற்கு வந்த சோதனை!.. நொறுங்கிப்போன ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிரபல ஐடி நிறுவனமான Tata Consultancy Services (TCS), அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் Epic System Corp. நிறுவனத்தின் தரவுகளைத் திருடியதாகக் கூறி, ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'ஏற்கனவே கொரோனா வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'!?.. பிரபல ஐடி நிறுவனத்திற்கு வந்த சோதனை!.. நொறுங்கிப்போன ஊழியர்கள்!

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் Epic System Corp. கடந்த 2014ம் ஆண்டு, அந்நிறுவனத்தின் புதிய கிளையை நிறுவுவதற்கு, தொழில்நுட்ப உதவிகளை வழங்க TCS உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த Project நடந்து கொண்டிருந்த போது, TCS ஊழியர்கள் Epic System நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைப் பற்றி அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அந்த தரவுகளை வைத்து புதிய மென்பொருள் ஒன்றை TCS வடிவமைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

tcs to pay 140 million us dollar for epic system lawsuit employees

இது தொடர்பாக, அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டு, 2016ம் ஆண்டு TCS நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க நீதிமன்றம் TCS நிறுவனத்திற்கு 140 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,037 கோடி) நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

எனினும், TCS நிறுவனம் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, எந்த தரவுகளையும் தவறாக பயன்படுத்தவில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்