நடப்பு 'ஆண்டை' விட 30% அதிகம்... 'பிரபல' கம்பெனியால்... ஐடி ஊழியர்களுக்கு 'அடித்த' ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பொருளாதார மந்தநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு அவதிகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

நடப்பு 'ஆண்டை' விட 30% அதிகம்... 'பிரபல' கம்பெனியால்... ஐடி ஊழியர்களுக்கு 'அடித்த' ஜாக்பாட்!

இந்தநிலையில் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம் நடப்பு ஆண்டை விட 30% ஊழியர்களை அதிகமாக பணியில் அமர்த்தவுள்ளதாக தெரிவித்து உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 39000 ஊழியர்களை புதிதாக அந்நிறுவனம் பணியில் அமர்த்த திட்டமிட்டு இருக்கிறது.

சமீபத்தில் டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த டிசம்பர் காலாண்டில் நிகரலாபம் 0.20% அதிகரித்து, 8,118 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 8,105 கோடி ரூபாயாக இருந்தது. லாபம் அதிகமாக இல்லாத நிலையிலும் டிசிஎஸ் வேலைவாய்ப்பினை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.