ஒரு லட்சம் 'ஃப்ரஷர்களுக்கு' அடிக்க போகும் ஜாக்பாட்...! 'எல்லாமே MNC கம்பெனிகள்...' - வெளியாகியிருக்கும் அதிரடி திட்டங்கள்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பின் 1 லட்சம் ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு லட்சம் 'ஃப்ரஷர்களுக்கு' அடிக்க போகும் ஜாக்பாட்...! 'எல்லாமே MNC கம்பெனிகள்...' - வெளியாகியிருக்கும் அதிரடி திட்டங்கள்...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல துறைகளில் வேலையிழப்பு அதிகளவில் காணப்பட்டது. சில நிறுவங்களில் பாதியாக சம்பளக் குறைப்பு நடைபெற்றது.

பல ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்திருந்தாலும், அங்கேயும் பலரின் வேலை பறிபோனது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முதல் அலை முடிந்து, இரண்டாம் அலையும் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனம் 12,000 பேருக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனம் 8,300 பேருக்கும், டிசிஎஸ் நிறுவனம் 20,000 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. இது வேலை தேடுபவர்கள் இடையே மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

அதோடு, இந்த 2021-22ஆம் நிதியாண்டில் சுமார் 40,000 ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் 2021-22 ஆம் நிதியாண்டில் சுமார் 35,000 ஃப்ரஷர்களுக்கு வேலை வழங்க உள்ளது.

மேலும், விப்ரோ நிறுவனமும் ஜூன் காலாண்டில் 12,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துள்ளது. இதைத் தவிர, 30,000 பேருக்கு வேலை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்