'தாத்தா பாருங்க'... 'இந்த ட்வீட் போட எத்தனை நாள் காத்திருந்தேன்'... 'டாடாவின் கைக்கு போன ஏர் இந்தியா'... 'கோடிக்கணக்கில் போன ஏலம்'... வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் கொரோனா பொது முடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பு நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இதன்காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் அதலபாதாளத்திற்குச் சென்றது. இதற்கிடையே கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.
அதன்படி ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்குச் செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து, ஏல விவரங்களை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்தது. டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா தனியார்மயமானதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலர் தெரிவித்துள்ளார்.
68 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.ஆர்.டி டாடாவிடம் இருந்து தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா மறுபடியும் பேரன் ரத்தன் டாடா வசம் செல்கிறது. இதனால் உணர்ச்சி பெருக்கில் ரத்தன் டாடா Welcome Back என ட்வீட் செய்துள்ளார்.
Welcome back, Air India 🛬🏠 pic.twitter.com/euIREDIzkV
— Ratan N. Tata (@RNTata2000) October 8, 2021
மற்ற செய்திகள்