Thalaivi Other pages success

'தோளுக்கு மேல வளர்ந்த பசங்க'... 'இப்படி மொத்த சொத்தையும் அழிச்சிட்டோமே'... யாரு செஞ்ச புண்ணியமோ, அனில் அம்பானிக்கு வந்த சூப்பர் வாய்ப்பு!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி எந்த தொழிலில் முதலீடு செய்தாலும் அதனை லாபகரமானதாக மாற்றும் திறமைசாலியாகத் திகழ்ந்து வருகிறார்.

'தோளுக்கு மேல வளர்ந்த பசங்க'... 'இப்படி மொத்த சொத்தையும் அழிச்சிட்டோமே'... யாரு செஞ்ச புண்ணியமோ, அனில் அம்பானிக்கு வந்த சூப்பர் வாய்ப்பு!

முகேஷ் அம்பானியின் திட்டங்கள் எப்போதுமே தற்போதைய சூழலுக்குப் பொருந்துவதோடு மட்டுமல்லாது, எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஜியோ, ரீடைல், புதிதாக Avantra பிராண்ட், BluSmart உடன் சேர்ந்து இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் எனத் தனது அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்.

T-Series and Anil Ambani’s Reliance Entertainment sign deal

அதே வேளையில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி அவருக்கு நேர் எதிராக வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கும் வேளையில், மொத்தமாகத் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார். இருப்பினும் அண்ணன் தம்பி இருவரும் இரு திசையில் , தொடர்ந்து புதிய துறையில் வர்த்தகம் செய்ய ஆர்வமாக உள்ளனர். இதன் படி அண்ணன் முகேஷ் அம்பானி விளையாட்டுத் துறையிலும், தம்பி சினிமா துறையிலும் புதிய திட்டங்களைக் கையில் எடுத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது மெல்ல மெல்ல விலகி வரும் நிலையில் சினிமா துறை வேகமாக இயங்கி வருகிறது. இந்த நிலையைப் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், இந்தியாவின் இரு முக்கியச் சினிமா நிறுவனங்களோடு மிகப்பெரிய திட்டத்திற்காகக் கைகோர்த்துள்ளார் அனில் அம்பானி.

T-Series and Anil Ambani’s Reliance Entertainment sign deal

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டி-சீரியஸ் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் இணைந்து அடுத்த 36 மாதத்தில் 10 திரைப்படங்கள் எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தில் திரில்லர், பயோபிக், காமெடி எனப் பல வகையில் சுமார் 1000 கோடி ரூபாய் திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் சில திரைப்படங்கள் அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளியாக உள்ளது.

டி-சீரியஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் கூட்டணியில் உருவாக்க இருக்கும் 1000 கோடி ரூபாய் திட்டம் தான் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா துறை சார்ந்த திட்டமாக உள்ளது. இந்தியாவில் பல முன்னணி சினிமா நிறுவனங்களும், சினிமா தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை தியேட்டர் ரிலீஸ் செய்யாமல், அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் இந்த 1000 கோடி ரூபாய் திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T-Series and Anil Ambani’s Reliance Entertainment sign deal

இதற்கிடையே அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் நிறுவனம் 4 வருடத்திற்கு முன்பு டெல்லி மெட்ரோ அமைப்பிற்கு எதிராகத் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்ற பென்ச், ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுத்துள்ளது. அதோடு நடுவர் நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து மொத்தம் 630 மில்லியன் டாலர் அதாவது 4,660 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கொடுக்க உத்தரவிட்டு உள்ளதாக ரிலையன்ஸ் இன்பரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது அனில் அம்பானிக்கு பெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சினிமா துறையில் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார் அனில் அம்பானி. இது ஒரு புறம் இருக்க முகேஷ் அம்பானி தனது தொலைக்காட்சி நிறுவனமான வாய்காம் 18 மூலம் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்புவது மற்றும் அதைச் சார்ந்த விளம்பரம் மற்றும் வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களை எதிர்த்து நேரடியாக முகேஷ் அம்பானி களத்தில் குதித்துள்ளார்.

T-Series and Anil Ambani’s Reliance Entertainment sign deal

இதைத் தொடர்ந்து வாய்காம் 18 அடுத்த ஐபிஎல், ஐசிசி போட்டிகள், அடுத்த வருசம் BCCI துவங்கும் போட்டிகள் அனைத்தையும் அடுத்தடுத்து கைப்பற்றி ஸ்போர்ட்ஸ் என்டர்டெயின்மென்ட் பிரிவில் முன்னோடியாக விளங்கத் திட்டமிட்டுள்ளது.

மற்ற செய்திகள்