45 நிமிஷத்துல டெலிவரி 'ஜாம்பவான்களுக்கு' போட்டியாக... களமிறங்கும் பிரபல நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

45 நிமிடங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் வசதியுடன் களமிறங்க இருக்கிறது.

45 நிமிஷத்துல டெலிவரி 'ஜாம்பவான்களுக்கு' போட்டியாக... களமிறங்கும் பிரபல நிறுவனம்!

நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் இ-காமர்ஸ் நிறுவனமும் ஒன்று. உலகிலேயே 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் கால்பதித்து வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக இந்திய நிறுவனங்களும் களத்தில் இறங்கி ஆரம்பித்து உள்ளன.

அந்த வகையில் உணவு டெலிவரியில் முன்னணி நிறுவனமான ஸ்விக்கி 45 நிமிடங்களில் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் இன்ஸ்டாமார்ட் என்னும் சேவையினை அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் ஐஸ்க்ரீம்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விநியோக சேவையை காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் பிக் பாஸ்கெட், பிளிப்கார்ட், அமேசான், டன்ஸோ, ஜியோமார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்விக்கி கடும் போட்டியாளராக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 90 நிமிடங்களில் டெலிவரி செய்யும் வசதியினை பிளிப்கார்ட் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்