'ஐயோ, சும்மா இல்லீங்க மனசுக்குள்ள அவ்வளவு பயம் இருக்கும்'... 'Swiggy எடுத்திருக்கும் அதிரடி முடிவு'... நெகிழ்ந்துபோன ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இந்த கொரோனா காலகட்டத்தில் மனதில் ஒரு வித பயத்துடன் தான் டெலிவரி செய்ததாக swiggy ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

'ஐயோ, சும்மா இல்லீங்க மனசுக்குள்ள அவ்வளவு பயம் இருக்கும்'... 'Swiggy எடுத்திருக்கும் அதிரடி முடிவு'... நெகிழ்ந்துபோன ஊழியர்கள்!

கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் உணவு டெலிவரியில் ஈடுபட்ட ஊழியர்களின் பணியையும் மறக்க முடியாது.

Swiggy Announces Covid Vaccine Cover For Over 2 Lakh Delivery Partners

பொது முடக்கக் காலகட்டத்தில் குடும்பத்தை விட்டு தனியாக இருந்த இளைஞர்கள் மற்றும் தனியாக வசித்து வந்த வயதானவர்கள் எனப் பலருக்கும் உரிய நேரத்தில் உணவைச் சேர்த்து தங்களால் முடிந்த பணியைச் செய்தார்கள். அந்த வகையில் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள இரண்டு லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆகும் செலவினை ஏற்றுக்கொள்வதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

Swiggy Announces Covid Vaccine Cover For Over 2 Lakh Delivery Partners

முதல்கட்டமாக 45 மற்றும் அதற்கு மேல் வயதுடைய 5 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்று முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் சுந்தர் தெரிவித்துள்ளார். நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவிற்கு முன்னுரிமை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Swiggy Announces Covid Vaccine Cover For Over 2 Lakh Delivery Partners

மேலும் தங்கள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதனால் ஏற்படும் வருமான இழப்பினையும் ஈடுகட்ட முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ஸ்விக்கி எடுத்துள்ள இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ள அதன் ஊழியர்கள், இதனால் பயம் விலகி நாங்கள் தைரியமாக எங்கள் பணியைச் செய்யலாம் எனக் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்