அது என்ன 'பல்ஸ்' கிரெடிட் கார்டு...? 'அத' வாங்குறவங்களுக்கு 'ஸ்மார்ட் வாட்ச்' இலவசம்...! - புதிய சலுகையை அறிமுகம் செய்த 'பிரபல' வங்கி...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பாரத ஸ்டேட் பேங்க் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அது என்ன 'பல்ஸ்' கிரெடிட் கார்டு...? 'அத' வாங்குறவங்களுக்கு 'ஸ்மார்ட் வாட்ச்' இலவசம்...! - புதிய சலுகையை அறிமுகம் செய்த 'பிரபல' வங்கி...!

இப்போது மக்கள் அதிகமாக கிரெடிட் கார்டு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பணம் அப்போது இல்லையென்றாலும் உபயோகப்படுத்தி விட்டு அப்புறமாக பணத்தை கட்டுவது வழக்கம். இன்றைய நவீன இளைஞர்களுக்கு கிரெடிட் கார்டு அத்தியாவாசிய தேவையாக மாறிவிட்டது.

அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள் பல நிறைய சலுகைகள் அறிவிப்பதும் உண்டு. பண்டிகைக் காலங்களும் சலுகைகள் வருவதால் இளைஞர்கள் அதை உபயோகப்படுத்த எண்ணுகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ‘பல்ஸ்’ என்னும் புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. மருத்துவம், சுற்றுலா, எரிபொருள் நிரப்ப போன்ற தேவைகளுக்கு இந்த கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த கிரெடிட் கார்டு மூலமாக ஆண்டிற்கு ரூ.2 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டுக்கான ஆண்டுச் சந்தாவிலிருந்து முழு விலக்கம் அளிக்கப்பட உள்ளது.

உடல் நலத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு சந்தா விலையான ரூ.1,499 செலுத்தி வாடிக்கையாளராக மாறினால் ரூ.4,999 மதிப்புள்ள Noise ColorFit Pulse ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஸ்மார்ட் வாட்ச் கட்டுவது அதிகரித்து வருகிறது. ஸ்டைலுக்காக கட்டுவதை தாண்டி அதன் மூலம் இதயத்துடிப்பு முதல் பிபி, சுகர் வரைக்கும் துல்லியமாக கணக்கிடும் நவீன ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

NEW OFFER, CUSTOMERS., CREDIT CARD, SMART WATCH, SBI, பாரத ஸ்டேட் பேங்க், கிரெடிட் கார்டு, பல்ஸ், PULSE, ஸ்மார்ட் வாட்ச்

மற்ற செய்திகள்