நான் ஐபோன் தான் ஆர்டர் பண்ணினேன்.. ஆனா வந்தது அது இல்ல.. வந்த பொருளை நினைத்து 7 நாளா மன வருத்தத்தில் இருக்கும் பெண்

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

லண்டன்: ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன்-13 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தவர் ஏமாந்து போயுள்ளார்.

நான் ஐபோன் தான் ஆர்டர் பண்ணினேன்.. ஆனா வந்தது அது இல்ல.. வந்த பொருளை நினைத்து 7 நாளா மன வருத்தத்தில் இருக்கும் பெண்

ஐபோன் ஆர்டர்:

லண்டனைச் சேர்ந்த 32 வயதான கௌலா லாஃபிலி என்ற பெண், ஜனவரி 24-ஆம் தேதி பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் இருந்து தனது லண்டன் வீட்டு முகவரிக்கு ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அவர் முன்பணமாக இந்திய மதிப்பில் சுமார் 12,500 ரூபாயைச் (150 யூரோ) செலுத்தி, 36 மாத தவணைத் திட்டத்தில் சேர்ந்துள்ளார். மொத்த தவணைத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் ஆகும்.

இரு நாட்களில் பார்சல் வந்துவிடும்:

ஐபோனுக்காக காத்திருந்த கெளலாவுக்கும் அந்த ஷாப்பிங் தளத்தில் இருந்து, இன்னும் இரண்டு நாள்களில் ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யப்படும் என்று தகவல் வந்துள்ளது. கொண்டாட்டத்தில் இருந்த கெளலாவுக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஐபோன் டெலிவரிக்கான பார்சல் வந்துள்ளது.

காத்திருந்த அதிர்ச்சி:

ரொம்ப நாள் கனவாக இருந்த ஐபோன் தனக்கு கிடைக்க போகிறது. இனி வளைத்து வளைத்து செல்பி எடுக்கலாம் என ஆசையாக பார்சலைத் திறந்து பார்ந்த மெளலாவுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சிக் காத்திருந்தது. ஐபோன் எங்கடா என தேடி பார்த்தவருக்கு சுமார் ரூ.1,30,000 மதிப்பில் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோனுக்கு பதிலாக, சோப்பு டப்பா ஒன்று பார்சலில் இருந்துள்ளது.

உடனே நடவடிக்கை எடுங்கள்:

இதுபற்றி உடனடியாக அந்த நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார் மெளலா. பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பார்சல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏழு தினங்கள் ஆனபோதும், இன்னும் அந்த நிறுவனம் தன்னைத் தொடர்புகொள்ளவில்லை என தனியார் செய்தி சேனலில் பாதிக்கப்பட்ட பெண் மெளலா வருத்தத்துடன் கூறியுள்ளார். உடனடியாக சோப்புப் டப்பாவுக்கு பதிலாக, தனது ஐபோனை கொடுக்கும்படி மெளலா பார்சல் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது முதன்முறை அல்ல:

இப்படி நடப்பது இது முதன்முறையல்ல, இதேபோன்று, கடந்த ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கரோல் என்ற நபருக்கும் ஐபோன்-13 ப்ரோ மேக்ஸ் மாடலை தேர்வு செய்து சுமார் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தார். தனக்கு பிடித்த மொபைலை காண ஆவலுடன் காத்திருந்த டேனியலுக்கு, பார்சலில் டெலிவரி செய்யப்பட்டது 2 கேட்பரி ஒயிட் ஓரியோ சாக்லேட்டுகள் மட்டும் தான். நொந்து போனார். இதே மாதிரியாக இந்தியாவிலும் விலை உயர்ந்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்கள் இருந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

SMARTPHONE, IPHONE 13 PRO MAX, லண்டன், LONDON, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்

மற்ற செய்திகள்