வெறும் 4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. கண்ணீரில் சொமேட்டோ முதலீட்டாளர்கள்

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் முதல் முறையாக ரூ.100-க்கு கீழ் விலை குறைந்துள்ளது.

வெறும் 4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. கண்ணீரில் சொமேட்டோ முதலீட்டாளர்கள்

கடந்த 2021-இல் இந்த நிறுவனத்தின் பங்குகள் லிஸ்ட் செய்யப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து ஐந்து செஷன்களாக சொமேட்டோ சரிவை சந்தித்து. சுமார் 25 சதவீத வீழ்ச்சியை அந்நிறுவனம் சந்தித்துள்ளது.

Shares of zomato fell below Rs 100 for the first time.

சமீபத்தில் ஐபிஓ வெளியிட்ட முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாகத் இருந்த சொமேட்டோ நிறுவனம் கடந்த 4 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ரத்த அழுத்தத்தை எகிற வைத்து விட்டது என்றே சொல்லலாம்.

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஐபிஓ வெளியிட்டு வெற்றிகொண்ட முதல் நிறுவனமாக சொமேட்டோ நிறுவனம் திகழ்கிறது. ஜூலை 2021ல் சோமேட்டோ 76 ரூபாய் விலையில் ஐபிஓ வெளியிட்டு சுமார் 65 சதவீதம் ப்ரீமியம் விலையான 125.85 ரூபாய்க்கு பட்டியலிட்டு வெற்றி பெற்றுள்ளது.

Shares of zomato fell below Rs 100 for the first time.

பாதிப்படைந்த முதலீட்டாளர்கள்:

ஆனால் கடந்த நான்கு நாட்களில் ஏற்பட்ட சரிவில் சொமேட்டோ பங்குகள் 112.55 ரூபாய் என்ற 52 வார சரிவை பதிவு செய்து ஐபிஓ முதலீட்டாளர்கள் முதல் நீண்ட கால முதலீட்டாளர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையில்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் மூலம் 4 நாள் தொடர் வர்த்தகச் சரிவை சொமேட்டோ பதிவு செய்தது. இதனால் முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு மதிப்பில் 15,624 கோடி ரூபாய் அல்லது 2.10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.

Shares of zomato fell below Rs 100 for the first time.

சொமேட்டோ  பங்குகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளது, இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடும் சரிந்து உள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 427.44 புள்ளிகள் சரிந்து 59,037.18 புள்ளிகளை எட்டியுள்ளது.

21 சதவீதம் வரை சரிவு:

அண்மையில் ஐபிஓ வெளியிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களான பேடிஎம், கார்டிரேட், PB பின்டெக் மற்றும் பினோ பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை தனது ஐபிஓ விலையில் இருந்து 10 முதல் 50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் நைகா நிறுவனம் ஐபிஓ-விற்குப் பின் பதிவு செய்யப்பட்ட உச்ச விலையில் இருந்து 21 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

அதேப் போன்று ஒன்-97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம்), கார்டிரேட், PB ஃபின்டெக், ஃபினோ பேமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஐ.பி.ஓ விலை 10 முதல் 50 சதவீதம் வரை வீழ்ந்துள்ளது. FSN இ-காமர்ஸ் நிறுவனமும் 21 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ZOMATO, SHARES, சொமேட்டோ, பங்குகள்

மற்ற செய்திகள்