ரூபே கார்டு பயன்படுத்துறீங்களா?.. அப்போ இந்த 'ஜாக்பாட்' உங்களுக்கு தான்!.. செம்ம சான்ஸ்... வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ரூபே கார்டு மூலமாக ஷாப்பிங் செய்தால் 65 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபே கார்டு பயன்படுத்துறீங்களா?.. அப்போ இந்த 'ஜாக்பாட்' உங்களுக்கு தான்!.. செம்ம சான்ஸ்... வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்!

விசா, மாஸ்டர் கார்டு போன்ற அந்நிய நிறுவனங்களின் கார்டுகளுக்குப் பதிலாக இந்திய அரசு ரூபே கார்டை (RuPay) 2012ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம்.

ஆன்லைன் பேமெண்ட், ஷாப்பிங் செய்யவும் இதைப் பயன்படுத்தலாம். ரூபே கார்டுகளுக்கான பரிவத்தனைக் கட்டணமும் குறைவு என்பதால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பண்டிகை சீசனை முன்னிட்டு ரூபே கார்டு பயன்பாட்டாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பை இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) வெளியிட்டுள்ளது.

இச்சலுகை குறித்து இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரியான குணால் கலவாத்தியா பேசுகையில், "ரூபே ஃபெஸ்டிவ் கார்னிவல் சலுகை வாடிக்கையாளர்களுக்கு நல்ல பயன் அளிக்கும் எனவும்,

அதன் மூலம் இந்த பண்டிகை சீசனை அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள் எனவும் நம்புகிறோம். பண்டிகை கால ஷாப்பிங்கில் டிஜிட்டல் வாயிலாக வாங்கும் நடவடிக்கையும் இதன் மூலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்