சொந்தமா 'பிசினஸ்' தொடங்க ஆசை இருக்கா...? ரூ.25 லட்சம் வரை 'கடன்' தருவதாக அறிவித்துள்ள 'பிரபல' வங்கி...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஐசிஐசிஐ பேங்க் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து வங்கிகடன் பெரும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் அதிகபடியான ஆன்லைன் ஷாப்பிங்னாக மாறிய நிலையில் மக்களும் உட்கார்ந்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையானதை வாங்கி கொள்கின்றனர். அதோடு 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே பொதுமக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.
கொரோனா காலத்தில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்தது. அதோடு, அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிகமான சிறப்புச் சலுகைகளை அறிவித்தும் வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஃபிளிப்கார்ட் நிறுவனமும் ஐசிஐசிஐ வங்கியும் இணைந்து சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
அதென்னவென்றால், ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளராகப் பதிவுசெய்தவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையில் கடன் பெறலாம்.
இந்த சலுகை ஓவர் டிராஃப்ட் வசதியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே இந்த ஓவர் டிராஃப்ட் வசதியில் பணம் எடுக்க முடியும்.
அதுமட்டுமில்லாமல், ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு இல்லாமல் மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் அவர்கள் பிளிப்கார்ட் தளத்தில் பதிவுசெய்திருந்தாலே இந்த ஓவர் டிராஃப்ட் சலுகையைப் பெறமுடியும்.
மற்ற வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் ஐசிஐசிஐ வங்கியில் நடப்பு கணக்கு டிஜிட்டல் முறையிலேயே திறந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கியின் சுய வேலைவாய்ப்பு பிரிவு தலைவர் பங்கஜ் காட்கில் கூறும் போது 'ஐசிஐசிஐ வங்கியின் இந்த திட்டத்தின் மூலம் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவிகள் எளிதாகக் கிடைக்கும்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்