'நீங்க தனியாள் இல்ல...' 'உங்க பின்னாடி நாங்க இருக்கோம்...' 'நம்ம ஊழியர்கள்ல யாராவது கொரோனா வந்து இறந்துட்டாங்கனா...' - நெகிழ வைக்கும் பல 'சலுகைகளை' அறிவித்த 'பிரபல' நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனாவால் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு 5 ஆண்டுகளுக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியமும், அவருடைய குழந்தைகளின் படிப்பு செலவும் ஏற்க்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீண்டெழுவது என்பது மிகப்பெரும் சவாலான காரியமாக இருந்துவருகிறது. கொரோனா பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மற்றும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலையன்ஸ் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளரின் குடும்பத்துக்கு பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா வைரசினால் உயிரிழந்த நம்முடைய ஊழியர்களின் குடும்பத்துக்கு துணையாக இந்த இக்கட்டான சமயத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் எப்போதும் துணை நிற்கும். மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் குடும்ப ஆதரவு மற்றும் நல்வாழ்வு திட்டங்களை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்துக்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவர் கடைசியாக வாங்கிய ஊதியம் மாதந்தோறும் வழங்கப்படும்.
உயிரிழந்த பணியாளரின் குழந்தைகளுக்கு அவர்கள் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை இந்தியாவின் எவ்வளவு பெரிய கல்வி நிறுனத்தில் படித்தாலும் அதற்கான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் செலுத்தப்படும்
உயிரிழந்த பணியாளரின் குழந்தை இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும்வரை மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான முழு மருத்துவத் செலவு, வழங்கப்படும்.
கொரோனாவால் பணியாளர் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படும் சூழலில் அவர்களுக்கு சிறப்பு கொரோனா கால விடுப்பு வழங்கப்படும்.
மேலும், நேரடி ஊதியம் பெறா பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் மொத்தமாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
ரிலையன்ஸ் பணியாளர்களே, இந்த கடினமான காலத்தில் நீங்கள் தனியாக இருப்பதாக யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குடும்பமே உங்கள் ஒவ்வொருவருடன் துணை நிற்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்