சக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி!.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சக்கையாக பிழிந்து எடுத்த கொரோனா ஊரடங்கு... சோர்ந்து போன ஊழியர்களுக்கு... நிறுவனங்கள் இன்ப அதிர்ச்சி!.. அதிலும் 'இந்த' பிரபல நிறுவனத்தின் அறிவிப்பு டாப்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடி உருவானது.

இதனால் ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, சம்பளத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டன.

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல், தீபாவளி, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போனஸ் உள்ளிட்ட சலுகைகளையும் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சம்பளக் குறைப்பைத் திரும்பப் பெற்று ஊதிய மற்றும் போனஸ் சலுகையை அளித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன்ஸ் பிரிவுகள் இச்சலுகைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் 30 சதவீதம் வரையில் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்நிறுவனம் கொரோனா பாதிப்பை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் 50 சதவீதம் வரையில் சம்பளக் குறைப்பை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல்., மைண்ட் ட்ரீ போன்ற பல்வேறு நிறுவனங்களும் சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் போனஸ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

உற்பத்தித் துறை மற்றும் சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த பண்டிகை சீசனில் இச்சலுகை தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயல்பு நிலை திரும்பி வந்தாலும் கொரோனாவுக்கு முன்னர் இருந்த ஊதிய உயர்வு நிலை ஏற்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

மற்ற செய்திகள்