ATM பணப்பரிவர்த்தனை ‘கட்டணம்’ உயர்வு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. எப்போது முதல் அமல்..?
முகப்பு > செய்திகள் > வணிகம்ஏடிஎம் பணம் பரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15 ரூபாயை தற்போது Interchange கட்டணமாக மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு சம்மந்தப்பட்ட வங்கிகள் கட்டணமாக கொடுத்து வருகின்றன. இதனை 17 ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பணம் சாராத ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வங்கி ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகு இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ எல்லைக்குள் வராத பகுதிகளில் இந்த எண்ணிக்கை ஐந்து இலவச பரிவர்த்தனையாக இருந்து வருகிறது. சில வங்கிகள் குறிப்பிட்ட இலவச பரிவர்த்தனைக்கு மேல் தங்கள் ஏடிஎம் மையத்தில் தங்களது வங்கியின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கும் நடைமுறையை ஏற்கனவே வழக்கத்தில் கொண்டுள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதனை 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது. ஏடிஎம் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்